காதலை சுவாசிப்போம்


love-kadhal

உனக்காக வாழ்கிறேன்!!

அனுதினமும்

உனை எண்ணி நானும்!!

உயிர் இல்லாமல் போனாலும்

உனை மறந்திட முடியாது.. !

 

வானத்தில் விண்ணின்

மீன்கள் விரிந்தது போல்

உன் எண்ணத்தில்

என் மனமும் நீந்துகிறது..

வேண்டும் என்று

தோன்றும்!

என் அருகில் நீ

என்றும்!

இருந்தாலும் வலிக்கும்.

இல்லாமல் போனாலும் வலிக்கும்.

என் செய்வேன் நானும்.. !

 

உனை நினைக்க வேண்டும்!

என் வாழ்நாள் முடிந்தாலும்!

உன் மனையாக வேண்டும்,

உன் துனையாக நானும்.

கடந்து போக அல்ல,

கனவு நனவாய் மாற!

உனக்காக வாழ்கிறேன்!!

 

என்னென்று சொல்வேன்

என் காதலை!

நீ எனை பிரியும் முன்னே,

என் உயிர் போகும்

எமனின் பின்னே!

 

உனையன்றி யாரும் எனக்கு

துனை என்று வேண்டாம்!

நீ மட்டும் போதும்

என் வாழ்நாள் நிம்மதியாகும்!

 

எதிர்பார்ப்புகள் இல்லை

என் மனதில்..

எதிர்பாராத விதமாய் உன்மேல்

பாசம் பூண்டது நெஞ்சில்!

 

எந்நாளும் உந்தன்

நினைவோடு வாழ்வேன்..

நீயில்லா நேரம்

உன் நினைவோடு சேர்வேன்!

 

காரணம் தெரியவில்லை

உன் எண்ணங்கள்

என் கண்ணோடு வாழ!

நீயில்லா வாழ்க்கை,

எண்ண முடியாத என் இறப்புகள்!

 

காயங்கள் தோன்றினும்

கடவுளே பிரித்து விடாதே! ! !

 

4 Comments Add yours

 1. Senthil kumar சொல்கிறார்:

  Nice sissy made me to feel true lines……………..

  Liked by 1 person

  1. tamilelavarasi சொல்கிறார்:

   நன்றி சகோ….

   Like

 2. tamilelavarasi சொல்கிறார்:

  Reblogged this on தமிழின் அழகு! and commented:

  காதலை சுவாசிப்போம்:

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s