என் மனதைத் தொட்ட நிகழ்வுகள்

sad-and-happy-moments-in-life

அது நான் கண்ட காட்சி. அன்று வழக்கம் போல் அலுவலகம் சென்று, பணி முடித்து மாலை வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தேன்.. அப்போது என் மனதில் உடல் களைப்பின் பிரதிபலிப்பும், மனக்களைப்பின் சோர்வுகளும் சுமந்து நின்றிருந்தேன்..

“தினமும் இதே சுழற்சி… காலை எழுந்து புறப்பட்டு அலுவலகம், வேலை முடித்து வீடு” என்று என்னை சலித்துக் கொண்டுடிருந்த வேளை அது..!

அப்பொழுது என்னைக் கடந்து சென்றது ஒரு தள்ளு வண்டி. அப்போது குளிர்காலம் என்பதால் சூடான சுண்டல் அதோடு பலகாரம் உடன் தேங்காய்ப்பாலின் மணமும் சுண்டி இழுத்து மூக்கைத் துளைத்தது.. தெருவில் தனியே வாங்கி சாப்பிடும் பழக்கம் இல்லாததால் அவைகளை வேடிக்கை பார்த்த படி மட்டும் நின்றிருந்தேன்..

அடுத்த நொடி நான் ஆச்சரியப் படும் படி ஒன்றைக் கண்டேன்..

உடல் நோகாமல் அலுவலகம் சென்று வீடு திரும்பும் எனக்கு தோன்றிய களைப்பும், சலிப்பும் சிறிதளவும் இல்லாமல் அந்த தள்ளு வண்டி தள்ளிக் கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்.. அவள் தோற்றம் எளிமையில் அழகு.. தோராயமாக பதினாறிலிருந்து இருபதுக்குள் இருக்கும் அவள் வயது.. இன்னும் மாங்கல்யத்தை அவள் கழுத்து ஏந்தவில்லை என்பதை கண்டதும் புரிந்து கொண்டேன்..

தெருவில் அறுந்துபோன தனது செருப்பை குனிந்து எடுக்க கூச்சப்படும் பெண்கள் மத்தியில் நான் கண்ட புதுமை அவள்..

வியர்வை வெளிப்பட வாய்ப்புக் கொடுக்காத குளிரூட்டப் பட்ட அறைகளில் கணினியின் முன்பு கண்களைக் கெடுத்துக் கொண்டு உழைக்கும் பெண்கள் மத்தியில் சுண்டலோடு சண்டலாக அந்த சூட்டில் வெந்து கொண்டு சொட்டிக் கொண்டிருந்த வியர்வை கண்களுக்குள் விழுந்து விடாத படி துடைத்து பூமித்தாய்க்கு வீசிப் படைத்து விட்டுப் பிழைப்பைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தாள் தன் தள்ளுவண்டியை தள்ளிய படி..

முதலில் நானும் நினைத்தேன் “தனியே போகிறாளே” என்று. பின்பு தான் எனக்கு புரிந்தது “அவள் தனிமையில் செல்லவில்லை தன்னம்பிக்கையை தன் நெஞ்சில் விதைத்து விட்டுச் செல்கிறாள்” என்று..

என் களைப்பை களைந்து விட்டுச் சென்ற அவள் தைரியதிற்க்குத் தலை வணங்குகிறேன்….!!!

Advertisements

4 Comments Add yours

  1. Senthil kumar says:

    Nice…

    Liked by 1 person

    1. நன்றி சகோ….

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s