என் மனதில் உள்ளதை சொல்கிறேன்


ant

என் மனதில் உள்ளதை சொல்கிறேன். சரியானதை ஏற்றுக்கொண்டு தவறை தயவு கூர்ந்து தெரிவியுங்கள் தோழமைகளே. இது என்னைப் பற்றி நான் அறிந்திட ஒரு வாய்ப்பாக அமைய விரும்புகிறேன்.

தோற்பது துயரம் என்று துவண்டு போன தோழமையே தோல்வி துயரம் இல்லை, தோற்பவர் மூடர் இல்லை. பாரத்தைக் கொடுத்த வாழ்க்கை பாதையை கொடுக்காதா என்ன? வஞ்சகம் நிறைந்த உலகமடா. அதில் வாழத் தெரிந்தவன் மேதையடா.. இது

சரியா? இல்லை.. சாதிக்கப் பிறந்தவர்கள் இதை ஏற்க மாட்டார்கள். வழிகள் முழுதும் வாழ்கையடா, அதை வாழ்ந்து பார் உனக்கு புரியுமடா.. என்று மறு மொழி போதிப்பார்கள். நீங்கள் எதை கூறுவீர்கள்?. சிற்றெரும்பு கூட தவற விட்ட உணவை எண்ணி கலங்கி நிற்பதில்லை. மீண்டும் மீண்டும் முயலும். நீங்கள் எதற்கு நழுவ விட்ட வாய்ப்பை எண்ணி நொந்து கொண்டிருக்கிறீர்கள். என்றுமே வாழ்க்கை பாரபட்சம் பார்ப்பதில்லை. இன்று உங்களை விட்டு போன வாய்ப்பு நாளை உங்களிடமே வரும். ஆனால் நீங்கள் அதை ஏற்கும் நிலையில் இருக்க மாட்டீர்கள். அதை விட உயரத்தில் இருப்பீர்கள். அதுவே அன்று உங்களுக்கு எட்டாத வாய்ப்பு எட்டியிருந்தால், இன்று நீங்கள் எட்டாத உயரத்தில் இருந்திருக்க மாட்டீர்கள்.. இவ்வுலகில் அனைத்தும் அறிந்த ஆசாமிகள் யாருமே இல்லை. வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லோரும் கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். பின்பு எதற்கு இந்த தோல்வியின் தாழ்வு மனப்பான்மை.. தூக்கி எறியுங்கள் அதை.. மற்றவரிடத்தில் மக்கிப் போன பல விடயங்கள் நம்முள்ளே மலர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை முதலில் உணருங்கள்.. பின்பு புரியும் வாய்ப்பை தவற விட்டவர் தரணி ஆளலாம், வாழ்வில் தோற்பவர் வாகை சூடுலாம் என்று.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s