என் பாதையின் பதிவுகள்-2


64876

நேற்று மாலை பேருந்தை விட்டு விட்டேன். அடுத்த பேருந்து வர சரியாக ஒரு மணி நேரம் இருந்தது. பொதுவாக எல்லோருக்குமே பேருந்துக்காக காத்திருக்கும் நேரம் கொடுமையாகவே இருக்கும். எனக்கும் அப்படித்தான்.  ஆனால் நேற்று அந்த ஒரு மணி நேரத்தில் நான் சாலையில் பார்த்தவை பல. அந்த பலவற்றையும் கவனிக்க தூண்டியது ஒரு சம்பவம்.

பக்குவப் பட்ட முக பாவணையுடன் ஒரு ஆண். பார்ப்பதற்கு ஐடி நிறுவன ஊழியர் போல தோற்றம். உடன் அவருடைய மனைவியும், தோராயமாக ஐந்து வயதுடைய மகளும் இருந்தனர். அவரது மனைவி நடந்து கொண்டதை பார்த்தால் வெகுளியாக தெரிந்தாள். நான் அமர்ந்திருந்த பேருந்து நிறுத்தத்தின் அருகில் தான் அவர்கள் சாலையை கடக்க நின்றிருந்தனர்.

ணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏதோ மன சங்கடம் போல் தெரிந்தது. நடுவில் எதுவும் அறியாத குழந்தை தானாக தனியே தமிழை பேசி கற்றுக் கொண்டிருந்தது.

ஏதோ மெதுவாக, சாதுவாக மனைவி பேசினாள். உடனே திடீரென்று திட்ட ஆரம்பித்தார் பாருங்கள்…. அந்த குழந்தை “விருக்” கென்று பயந்து கற்ற மொழியுடன் பெற்ற மொழியும் மறந்திருக்கும். பேருந்து நிறுத்தத்தில் உள்ள அனைவரின் கண்களும் அவர்கள் மீது தான். நீங்கள் மட்டும் அங்கு இருந்திருந்தால் அவ்வளவு தான் அவரை ஏதாவது செய்திருப்பீர்கள்.. கட்டிய மனைவி என்றும் பாராமல் எத்தனை வார்த்தை.. திட்டிக் கொண்டே சாலையை கடந்தனர்.

அது இரண்டு வழி சாலை. ஒரு புறம் கடந்து மறு புறம் கடக்க நின்றிருந்தனர். சடாரென்று ஒரு அறை. அத்தனை வாகன இறைச்சலுக்கு இடையிலும் தெளிவாக கேட்டது சத்தம் நடு சாலையில்.

கோவக்காரர்  அடித்து விட்டார் போலும் என எண்ணி திரும்புகிறேன்…. அடித்தது அவர் அல்ல.. ஒரு பெண் காவல் துறை அதிகாரி. கணவரின் கன்னம் வீங்கியது கண்டு செய்வதறியாது திகைத்துப் போனாள் மனைவி. காவல் துறை அதிகாரி சொன்னார்

“என்ன? பெரிய மாவீரன்னு நெனப்பா. உங்க பிரச்சனைய நாலு செவுத்துக்குள்ள வச்சுக்கனும். பக்கத்துல கொழந்த இருக்கு அறிவில்ல..? இப்படி ரோட்டுல வார்த்த பேசற.. இனி இதெல்லா வச்சுக்க கூடாது. புரிஞ்சுதா? இல்ல ஸ்டேசன் க்கு கூட்டிட்டு போய் புரிய வைக்கட்டுமா?  ” என்று அவரது கையை பிடிக்க, இடையில் அவரது மனைவி “வேண்டாம் மா. விட்ருங்க” என தட்டுத் தடுமாறி தடுத்து நிறத்தி உடன் கணவனையும் குழந்தையையும் அழைத்துச் சென்றாள்..

இது அவருக்கு தேவை தானா? தெருவிலும், சாலைகளிலும் தேவையில்லா வார்த்தைகளை ஏன் பிரயோகிக்க வேண்டும்..? ஏன் அவதிக்குள்ளாக வேண்டும்.. ?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s