கொட்டும் மழையிலே
ஒற்றைக் கோலம் பூண்டாய்.
வெட்டும் மின்னலிலே
விண்மீனாய் பிரகாசித்தாய்.
வட்ட நிற கண்ணாடிப் பொட்டாய்,
கொட்டுகின்றது சொட்டு சொட்டாய்.
திட்டம் போட்டு காத்திருக்கிறாய்
தேரை மீன்களின் வருகை நோக்கி.
குளிர் தனிலே குறுகி நிற்கும் உன் அழகைக் கண்டால்-என்
மனம் தனிலே மறுகி வீழுது இம்மண்ணில்.
கவலை மறந்து
கவிதை எழுது –உன் அலகுகளால்.
ஒற்றைச் சொல்லும்
ஓர் ஓவியமே-உன் குரல் காற்றில் கரைவதினால்.
உன் வாசம் அறியா தேசம் இது.
சற்றும் சலனம் இல்லா தருணமிது.
மேவிய மனம் கொண்டு
ஓவியச் சிலை ஒன்று,
அழகிய மழையில்
அசைந்தாடும் காட்சி.
முதுமை தழுவிய மனதையும்,
மண்ணில் தவழும் குழந்தையாய் மாற்றுமே..