அந்தி மாலை அழைக்கின்ற வேளை,
ஆகாயமெங்கும் காதல் அலை.
அசைகின்ற காற்றில் அலைகின்ற மனதின்
ஆசைக்கு இல்லையே எல்லை.
என்ன இது மாற்றம்?
இக்கனம் போதும் இறப்பே ஆனாலும் இன்பமாய் தோன்றும்.
கலைகிறது மேகம்,
அலைகிறது ஆசை.
ஒற்றை நொடியில் உலகம் மறந்து போனது.
கற்றை வார்த்தை கேட்க உள்ளம் உறைந்து போனது.
அவள் சற்றே நிமிடம் சரிந்து போக.
வெற்றிடம் இன்றி போனது இருவரிடையில்..