தமிழனின் வீரத்தை கிராமிய நடையில் உரைக்க முயன்றுள்ளேன் தோழமைகளே. உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அதோடு அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
சீறி வரும் தேகத்திலே
ஏறி வருது வீரக்காள.
பாய்ந்து வரும் வேகத்திலே
அனல் பறக்கும் மனசுக்குள்ள.
எட்டி நின்னு பார்க்கயிலே
ஈரக்குளை இறந்து போகும்.
பறந்து வந்து அடக்கயிலே
தமிழன் தேகமெல்லாம் தீப்பிடிக்கும்.
வீரம் விளைந்த பூமியிங்க.
மானம் விதைச்ச சாமியிங்க.
பூமி மாதா பாதம் தொட்டு விளையாடும் மயிலக்காள.
சீவி விட்ட கொம்பு கொண்டு புலுதி கெளப்பும் மச்சக்காள.
தேறி வரும் தூரத்துல – காளைய
தீண்டுறவன் தமிழன்.
ஏரு பூட்டி சோறு போட்ட – காளை
மூக்கணத்த அவுத்து விட்டு அடக்குபவன் வீரன்.
வாக்கனமில்லா தாழி வாசலுக்கு காவல் நிக்கும்.
மூக்கணமில்லா காள மூனு புலிக்கு ஈடு நிக்கும்.
வீரத்திலும் குறைச்சல் இல்ல.
தீரத்திலும் திளைத்தில்ல.
பாசத்துக்கும் பஞ்சம் இல்ல.
நேசத்துக்கும் பங்கமில்ல.
வாடி வந்த போதிலும் தேடித் தந்த செல்வமுங்க.
நாடி வந்த நேரத்துல சோறு போட்ட தெய்வமுங்க.
வழி வழியா வந்ததுங்க,
பாட்டன் பூட்டன் சொன்னதுங்க.
வருடம் முழுதும் வயக்காட்டில் உழவோட்டி
வேர்வை விதைக்கும்.
ஒரு பொழுது அவுத்து விட்டு தன் திமிழ் அடக்கத் தான் அழைக்கும்.
மண் மாதா பாதம் தொட்டு,
மனசெல்லாம் பொங்கலிட்டு,
ஆதி வழி வந்ததெல்லாம்,
வீதி வழி முறசரைந்து,
கலையெல்லாம் காத்திடுவோம்.
தழைத்தோங்க வாழ்ந்திடுவோம்.
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
யார் நண்பா உள்ளத்தீரத்தோடு தமிழாதிமூலத்தோடு தோள் குடுக்க முடியும் தமிழும் வீரமும் விவேக நெறி செறிந்து உங்கள் கவி தெறிக்க விட ஆழ்ந்த ஆன்மா அழியாதது என்னுள்ள சாட்சி வாழ்த்துக்கள்…..
LikeLiked by 1 person
நன்றி தோழமையே.. தமிழனின் வீரத்திற்கு ஈடு தரணியில் எவருமில்லை.
LikeLike
Reblogged this on தமிழின் அழகு!.
LikeLike