காதலர் தினம்


2013-latest-wallpapers-collections-for-lovers-day-valentines-day-images-greetings-english-tamil-wallpaper-5

காதல்…!

ஒற்றை வார்த்தை கொண்டுள்ளது,

ஓராயிரம் வித்தை..

காதல் நம்மை தொட்ட நோடி போதும்,

வானத்தையே எட்டி விட தோன்றும்.

தொலையாத தூரம் கூட

தொலைந்து தான் போகுமே,

காதல் கை கோர்த்து நடந்தால்..

காதல் தழுவிய கனம் – மனதில்

அழகிய சோலை வனம்.

காதல் கரம் பற்றிய நோடி,

கனவின் எல்லையில்லா நிலை

தோன்றும் நெஞ்சில்.

பூமி புதிதாய் மாறும்.

பூக்களை கைகள் ஏந்தும்.

பிறந்த குழந்தையின் பூமி தொட்ட பாதம் போல்,

சில்லென்று சிலிர்க்கும் மனம்.

மழை நின்ற போழ்திலும்

மரம் ஏந்திய மழைத் துளி போல்,

மனம் தாங்கிடும் காதலை.

எண்ணியதெல்லாம் எண்ணி ஏங்கும் நெஞ்சம்.

கண்மணியிலே காதல் வழியும் கொஞ்சம்.

திண்ணிய நெஞ்சம் படைத்தாலும்,

கெஞ்சியே அலைய விடும் காதல்…!

மங்கிய மாலையிலும்,

மங்காது காதல்.

தேங்கிய நீரும், தேனாக தெரியும்..

மனதின் வாசல் தோட்ட காதல் – என்றும்,

உயிரின் வாசம் தொட்டு வாழும்..

கடல் கண்ட அலை போல்

கண்கள் அலைந்திடுமே – காதலைக் காண..

துளி காதல் தந்த வெட்கம்,

கலி காலம் கடந்தாலும் மறவாது.

காதல்…

இனிக்கின்ற கசப்பு.

குளிர்கின்ற நெருப்பு.

அழகான எரிச்சல்.

அமைதியான துணிச்சல்.

மௌனமான கூச்சல்.

நிம்மதியான பதைச்சல்.

காதல் காதல் காதல்..

வேருக்கு மரம் மீது காதல்.

இலைக்கு துளி மீது காதல்.

பனிக்கு புல் மீது காதல்.

எனக்கு தமிழ் மொழி மீது காதல்..

காதல் இல்லா காலம்

தோன்றவில்லை இன்னும்..

அவ்வாறு தோன்றின்

இவ்வுலகே இருளாகிப் போகும்.

இம்மண்ணில் மாந்தர்கள் மடிந்தாலும் – மறையாது

உயிரில் பூண்ட காதல்.

One Comment Add yours

  1. Karthik M சொல்கிறார்:

    Superb Very Good Poem,Heart touched……

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s