தனிமையின் எல்லைகள்


sad-girl-wallpaper-hd_123616478_268

அடிகளைத் தேடுகிறேன்,

அடுத்த அடி எடுத்து வைக்க,

வேதனை என்னும் கத்தியால்

வெட்டப் பட்டதை மறந்து.

சில்லரையாய் சிதறும் சிரிப்பு,

உற்பத்தியில்லாத இதயத்தின்

இடையில் இருந்து.

கல்லோடும் மண்ணோடும்

கனவுகள் புதைந்தால்,

உயிர் ஆவி அறுமருந்து ஏற்காதே.

புவி தன்னை பல முறை தான்

வலம் வந்து நின்றாலும்,

துளி நேரம் நிலை இல்லாமல் திண்டாடுதே.

செவி சாய்க்க ஆளில்லை,

என் மனம் புழுங்கும் வலி தனையே..

ஓரிரு முறை கண்கள் கலங்கிட எண்ணும்,

சில நேரம் என் நெஞ்சே ஆறுதல் கூறிக்கொள்ளும்.

ஏனோ என் புவியில் புன்னகை இல்லை.

புன்னகை நிழலை இதழில் வைத்து அலைகிறேன்.

உடன் பிறப்பை விட

உயிராய் எண்ணிய நன்பர்கள்,

என் பிறப்பே எதற்கென்று

எண்ண வைத்தார் ஏனோ..

மணி மண்டபக் கோட்டை,

மனம் கட்டியதோ தனியே..

உயிரான நண்பரும்

உயிர் பறித்ததேனோ…

தனிமை கொண்டது நெஞ்சம்..

என் பக்க நியாயம் என்னவோ..

அவை வெளி வரும் நாள் என்றோ.

வெறுமையின் வேதனை

வெறி கொண்டாடும் நெஞ்சில்.

சிறமைத்தனம் என்று

சிரித்துக் கொண்டாடும் உலகம்.

ஓசை ஒன்று கேட்டேன்.

என் மனதை துளைக்க வந்தது.

சுற்றிலும் முட்கள் போல தோன்றும்.

என்னைச் சுற்றிலும் முட்கள் தான்

என எண்ணுதே என் நெஞ்சம்.

வண்ணத்தை தொட்ட பட்டாம்பூச்சி,

கன்னத்தைத் தொட்டுப் போனாலும்,

முள்ளாகி என்னைக் குத்தித் தான் போனது.

இணை இல்லை என்றார்.

இன்று இழிவாகிப் போனேன் பிறர் கண்களுக்கு.

அடுத்தவர் சரி தவறு தானா வாழ்க்கை.

செல்லாத தாளாய் சொல்லாத கவலை.

அவரவர் பாதை அவரவர்க்கு

தவறில்லை என்றாலும்

தனிமை தான் என் நிலைமை.

தவமாகிப் போக தனிமையும் வெறுமையில்லை,

இறைவனின் அன்புள்ள வரை…

துளை இங்கு இருந்தும்

இசைக்காத புல்லாங்குழல் போல..

2 Comments Add yours

  1. தமிழன் சொல்கிறார்:

    அளவிட கவிக்கேது அளவு என்றுள்ளத்தால் அளவிடமுடியுமா கனிவான களிப்பு…..
    இப்படி யதார்த்த நிலை இன்றைய சினிமா ஏன் மறந்து போயிற்று என சிந்திக்க செய்கிறது வாழ்க தங்(கள்)
    கவி அம்சங்கள் நீடுழியே…..

    Liked by 1 person

    1. tamilelavarasi சொல்கிறார்:

      நன்றி தோழமையே..

      Like

பின்னூட்டமொன்றை இடுக