யாருக்கும் வழி தெரியா காட்டுக்குள்


sad-girl-sitting-alone-broken-house

தனிமை..

யாருக்கும் வழி தெரியா காட்டுக்குள்,

ஒரு தனிமையான வாழ்க்கை..

வானத்து நிலவின் வாழ்க்கை

தனிமை தான் என்றாலும்

நான் நிலவல்லவே..

சூரியன் தொடா பூமி போல்,

என் வாழ்க்கை.

வேதனையின் நிறம் தெரியாது

என் கண்களுக்கு.

ஆனால் அந்நிறத்தைத் தவிற வேறு

எதுவுமே இல்லை என்னிடத்தில்.

கவலையின் உச்சியில்

வாழ்கிறது என் மனம்.

சாவின் சங்கமம் காண்கிறது

என் கண்கள்.

தென்றல் தீண்டா மலர் போல,

இன்பம் தீண்டா இதயம் இது.

அடர்ந்து விரிந்த பாதை

ஆயிரம் மைலுக்கு.

அகல் விளக்கு ஒன்றைக் கொடுத்து,

அறியாத அவலைப் பெண்ணை

அரை இருளில்

நடக்க விட்டாயே..

முடிவும் தெரியாது,

ஒன்றும் புரியாது வாழ்கிறேன்.

சுதி இல்லை என் இசையில்,

தாளம் இல்லை என் பாட்டில்.

கவி ஒன்று கொண்டுள்ள மாது

புவி மீது திண்டாடும் போது

தோள் கொடுக்க யாரும் வரவில்லை – என்றாலும்

பாழ் மனதை நோகடிக்கச் செய்கிறதன்றோ

பலர் செயல்கள்..

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s