இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை


635982646968672800-1766933105_fresh_nature-1280x720

என் இனிய தோழமைகளுக்கு இனிய மாலை வணக்கம்.

நான் பள்ளி பயிலும் போது எழுதிய முப்பது பக்க கவிதை தொகுப்பு ஒன்றை வலைப்பூவில் வெளியிட விழைகிறேன் தோழமைகளே. தினந்தோறும் இரண்டு பக்கம் வீதம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவிட எண்ணியுள்ளேன். இதுவரை என்னை ஊக்குவித்த  முகநூல் நண்பர்கள் மற்றும் இதர சமூக வலைதள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த முயற்சிக்கு காரணம் நீங்கள் அனைவரும் தான் தோழமைகளே. மேலும் உங்கள் அனைவரின் ஆதரவை எதிர் நோக்குகிறேன். பள்ளி பயிலும் போது எழுதிய காரணத்தால் இந்த கவிதையில் ஏதேனும்  பிழை இருக்கலாம் தோழமைகளே..  அவ்வாறு இருப்பின் கூறுங்கள் மாற்றிக் கொள்கிறேன்.. இனி கவிதைக்கு செல்வோம்..

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை

dsc_1592_dxors

கண்களுக்கு எட்டும் வரை

தென்படாத வறட்சி.

அழகான தோப்பு,

சுற்றிலும் வண்டித்தடம்.

 

வாய்க்கால் தண்ணீர்

வளைந்து வளைந்து

வரப்புகளெங்கும் வாயாடி

வரும்.

 

களை எடுக்க வந்த

சிலையான பெண்களும்

பல வகை களைகளை

பறித்து வருவார்.

 

களை எடுக்கும் இடத்தை விட்டு

அடுத்த மூலையில் ஆடவர்கள்

மூட்டை மூட்டையாய்

முக்கண் காயை இறக்கினார்.

முதலாளியின் பார்வையின் கீழ்

முத்தொழில் முடிந்தேறும்.

 

மழை மேகம் கொண்ட கருக்கலில்

மணி மூன்று இருக்கும்.

அந்த மாலை வேளையில்

தென்னை மர ஓலை வகுந்து

பின்னலிடும் வேலையில்

ஈடுபட்டிருந்தாள் அந்தப் பெண்.

 

அவள் தோற்றம் பார்த்தேன்,

புரிந்தது எனக்கு

காட்டு வேலைகளில் கெட்டிக்காரி என.

இருந்தும் அவள் படிப்போ

பன்னிரண்டு தான்.

 

நெகிழ்ந்து போன பழைய

பாவாடை,

முழங்கை மூடிய முக்கால் கை

சட்டை,

பராமரிக்கப் படாத தலை முடிகள்,

அழகு படுத்தப்படாத முகம்என்று

இருந்த அவளைப் பார்த்தால்

கிராமத்துப் பெண்ணின் தோரணைகள்

தெளிவாக தெரிந்தது.

2 Comments Add yours

  1. kartik சொல்கிறார்:

    Superb Good move about agriculture,all d best for upcoming lyrics

    Liked by 1 person

    1. tamilelavarasi சொல்கிறார்:

      மிக்க நன்றி நண்பா…

      Like

tamilelavarasi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி