இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-2


Morning Sun-3

ஊடகங்களின் வாயிலாகவும், சமூக வளைதளங்கள் வாயிலாகவும் உங்கள் விருப்பங்களை தெரிவித்தமை கண்டு மகிழ்ந்தேன் தோழமைகளே.. மிக்க நன்றி.. இது ஒரு சாதாரண தோட்டவேலை செய்யும் பதினேழு வயதுப் பெண்ணின் போராட்டம்..

இனி இன்றைய பகுதிக்குச் செல்வோம்..

img_7546

குடும்பத்திலோ தாயின் அரவணைப்பு,

தந்தையின் கண்டிப்பு.


காலையில் வீட்டு வேலை,

முடிந்ததும் காட்டு வேலைஅதை

முடித்து விட்டு வீடு சென்று வேலைஎன்று

உதிக்கும் சூரியனைப் போல்,

சுற்றி வரும் செக்கினைப் போல்

சுழன்று கொண்டே சென்றது

அவள் வாழ்க்கை..


அவள் வாழ்வில் வந்த

மகிழ்ச்சி எல்லாமே,

வானவில் வண்ணமாகவே

பிரகாசித்தது.

வானவில் போல் சில கனத்தில்

சிதைந்து விடும்..


இது போலவே அவளைப் பற்றி உங்களிடம்

ஆர்வத்தோடும், அளவற்ற பாரத்தோடும்

எழுதிக்கொண்டிருந்தேன்.


திடீரென்று தோன்றிய எண்ணம்,

பளிச்சென்று சொன்னது கொஞ்சம்,

என்னைப் பற்றி நான் உரைக்கிறேன் உங்களிடம், முடியுமானால் புரிந்து கொள்ளுங்கள்!” என்று அவள் கூரிய வார்த்தையில் என் நெஞ்சம்.


அவளது வலியை அவளாகவே

நான் உரைக்க முயல்கிறேன்.


சூரியனின் ஒளியை

சந்திரன் உறிஞ்சி

எந்திரம் போல இரவில் உமிழ்வதைப் போல்

மனதார உமிழ்கிறேன்

அவளது மனதை.!


அழகென்று சொல்ல முடியவில்லை,

ஆனால்

அழுக்கு என ஆனந்தமாய் சொல்வேன் என்னை.

ஏனென்றால்,

தென்னை மர ஓலை ஊறிய சேற்றில்

நான் ஊறியதால்.

களை எடுக்கும் போது அதில் வேர் கொண்ட

மண் என் மேல் படிந்ததால்.

வெயிலின் வெப்பத்தால் சுரந்த வியர்வை

காய்ந்து படர்ந்ததினால்.


செக்காய் மாறி சுழன்று கொண்டிருந்தாலும்

சற்று நிம்மதி தரும் இங்கு

சுற்றி இருக்கும் பச்சையும்,

சுடலை மாட சாமி கோவிலும்!!


செவ்வந்திப் பூ பறித்து,

செந்தூரமாய் திலகமிட்டு,

சிவப்பு நிற ஆடை கட்டி,

சிங்காரமாய் படுத்திருக்கும் மாசாணி அம்மனுக்கு

சிரிப்பு கொண்டு தூவுவேன்,

கண்ணீர் என்ற செவ்வந்தி பூவை..


இத்தனை இருந்தாலும்

எனக்கு

மகிழ்ச்சிக்கும் பஞ்சமில்லை.

ஏனென்றால் நான் காதலித்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s