உங்களின் விருப்பம் மற்றும் கருத்துக்கள் தெரிவித்தமை கண்டு மனம் மகிழ்ந்தேன் தோழமைகளே.. மிக்க நன்றி தோழமைகளே..
கல்வி.. எல்லோருக்கும் அது ஒரு வழக்கமான ஒன்று. ஆனால் படிக்க வழி இல்லாதவர்களுக்கு? இனி இன்றைய பகுதிக்குச் செல்வோம்..
சூரியன் முகம் மறைக்கும்
நேரம்..
தனிமை சூழ்ந்திருந்தது
என்னை..
அங்கு தென்னை மர ஓலையில்
புத்தம் புது பச்சைக் கடிகாரம்,
புதருக்குள் உள்ள பச்சைப் பாம்பு – என்று
பல வகை உயிரற்றவைகளையும் படைத்து
கடவுளாகிப் போனேன்.
கண்டவைகளைப் படைத்து
காலம் கடத்தாதே – என்று
கடிந்து கொண்டே சென்றது
என் தந்தையின் வார்த்தைகள்..
வெட்டும் கட்டழகு பெற்ற
பெண்ணை விட
கண்ணுக்கு புலப்படாத கடவுள்
மனம் பெரிது
என்று யாரோ சொன்னார்..
மனதில் பதிந்து தான் போனது..
தூரல்கள் சிந்தினாலும்,
துயில் மறந்து நின்றாலும் – என்னை
தூக்கி வளர்த்த ஜீவனின்
மனம் மகிழ
வாழ ஆசை எனக்கு.
ஆனால்
மதி இல்லா பேதை உனக்கு
மதி வளர்க்கும் படிப்பெதற்கு.
என்று சொன்னது விதி.
மனம் தாளவில்லை எனக்கு.
உயிர் உறக்கம் வரவில்லை.
என் கணவனின் கைப்பிடித்து,
கல்யாணம் தான் முடித்து,
நான் செல்ல வேண்டுமாம்
என் புகுந்த வீட்டிற்கு..
ஏன்?
பெண்ணான என் மனதிற்கு
மதிப்பில்லையா?
பெண்களின் மனம் என்ன
பொதை குழியா?
அனைத்தையும் புதைத்து வைக்க..
அருமையான சொல்வளம் தோழி ..👌👏👏👏வாழ்த்துக்கள்
LikeLiked by 1 person
மிக்க நன்றி தோழமையே..
LikeLiked by 1 person