வணக்கம் தோழமைகளே.
போன பகுதிக்கு விருப்பம் அளித்த தோழமைகளுக்கு மிக்க நன்றி. உடலில் சுரக்கும் வியர்வையும், கண்ணில் சுரக்கும் கண்ணீரும் நிறைந்த வாழ்க்கையின் வரிகள் இவை..
இனி இன்றைய பதிவு..
புன்னகை வேண்டும்
இந்த புவியில் நான்
மறையும் முன்னே.
என் துளி வியர்வை மழையாய்
இங்கு நிலம் தழுவியது ஏனோ?
என் மனம் தாங்க
யாரும் இல்லை
என்று ஏங்குகிறேன்.
தேவை என்று எண்ணும் என் மனம்,
இந்த படிப்பை.
ஆனால் மற்றவரோ
இதர தேவைகள் போதும்,
இதை இத்தோடு விட்டு விடு
என்கிறார்கள்.
என் செய்வேன் நானும். ?
வேண்டும் வேண்டும் வேண்டும்
தமிழின் இலக்கியம் வேண்டும்.
தனிமையின் அர்த்தம் வேண்டும்.
தாய் வலிக்குத் தகுதி வேண்டும்.
என் தன்னம்பிக்கைக்கு தகுந்த
வழி வேண்டும்.
நிச்சயமாய் வேண்டும்..
தூரத்தில் நான் நின்றாலும்,
துளி சாரல்
என்னைத் தொட்டவுடன்
மனம் அலை அலையாய்
மாறுவது
ஏனோ..
இருந்தாலும்
என் மனம் கொண்ட எண்ணமோ
படிப்பு..
காரணம் தெரியவில்லை,
ஏன் இதன் மேல்
இப்படி ஒரு பாசம் என்று.
முன் ஜென்மம்
என் கனவு
பலிக்காமல் போனதாலோ
என்னவோ..
செந்தூர வானம்,
சிவந்த வண்ணம் தீட்டும் நேரம்..
கொஞ்சம் குளிர் காற்றும்
நெஞ்சோடு கொஞ்சும்..
என்றாலும்,
என் நெஞ்சம்
வீட்டில் அப்பாவிடம்
கல்விக்காக மன்றாட
தயார் செய்து கொண்டிருக்கும்..
துளி நேரமும்
கலையாத கனவாய் என் படிப்பு..
என் கண்ணில் வழியும்
துளி கூட தெரியாதா உங்களுக்கு
என்று ஏங்கும் என் நெஞ்சம்..
கணைகளை இவ்வாறு தொடுத்தேன்
என் தந்தையிடம்.
பதில் எவ்வாறு வந்தது தெரியுமா..
கணைகளை தகர்க்கும் பீரங்கியாய்..