இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-7


32948-kneeling-prayer-1200.1200w.tn

தோழமைகளுக்கு என் வணக்கம்.. போன பகுதிக்கு விருப்பம் மற்றும் பின்னூட்டம் அளித்த தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. ஒரு பெண் தனது வலியை வெளிப்படுத்த நினைக்கும் தருணம் அவள் வார்த்தையில் தோன்றும் வலி, அப்போது அவள் உள்ளம் கொள்ளும் நிலை பற்றிய இன்றைய பதிவு..

The-Sunday-Morning-Prayer-The-Christian-Prayers-750x375

மாதுளையின் வண்ண மலர்
மாம்பிஞ்சு போல் மலர்ந்திருக்க,
வானமும் சற்று
தூரல் நிறுத்தி ஓய்வெடுக்க,
வானவில்லும் வந்து
வண்ணம் பூசி வீற்றிருக்க
வண்ண மயில் இடையின் வளை நிரப்பி,
கொஞ்சம் அசைந்தாடும் இம்மண்ணில்..
தோகையின் எழில் விழி வழியே என்றும்,
வந்தாடும் நம் நெஞ்சில்..

தீண்டிய தென்றலோடு
துன்பங்கள் போகுமோ..
ஏக்கத்தின் உச்சியில்
ஒற்றை மரமாய் என் மனம்..

வண்ண மயில் ஆட,
எண்ண அலைகள் நெஞ்சில் ஓட,
இருந்தாலும் வேண்டும் நிம்மதி..

கண்களில் கணை கொண்டு
எறியும் பல உள்ளத்தில்
கொஞ்சம் கூட இல்லை போலும் ஈரம்..

வருத்தம் வாட்டி எடுக்கும்
என் நெஞ்சை..
இருந்தும் மனம் நாடுமே உன்னை..

துயில் வருமோ,
அதில் துன்பம் வருமோ.
மனம் ஏங்குகிறது,
அதிலாவது தோன்றக்கூடாதா
கொஞ்சம் இன்பம்..
மனம் தளராமல் மன்றாடி நின்றேன்
இறைவனிடம் கீழ் உள்ளவாறு..

அருள் கொடுத்து அரவணைத்தான்..
பொருள் கொடுத்து புறம் காத்தான்..
பேரருளே என்று தாள் பணிகின்றேன்..
பேரொளியைக் காண நான் விளைகிறேன்..

உடலுக்குள் உயிராகினான்..
உயிருக்குள் மெய் பொருளாகினான்..
பயிருக்கு வாழ்வளித்து பசி போக்கினான்..
உயிருக்கு மதி கொடுத்து பரம் பொருளாகினான்..

என் தந்தை என எண்ணி நானும்..
உன் விந்தை பல பார்க்க வேண்டும்..
கண்ணீரில் முத்துக்கள் தந்து,
பக்தி எனும் சொத்துக்கள் பெற்றேன் இன்று..

தாழ் திறந்திடுவாய் இறைவா – உன் மனதின்
தாழ் திறந்திடுவாய்..

தண்ணீரில் முகம் பார்த்து – நின்று
உன் உருவம் என்று எண்ணி – இன்று
கண்ணீரில் என் வாழ்க்கை வாழ்கிறேன்..
சோகத்தில் என் மகிழ்வை சிதைக்கிறேன்..

என் உயிரும், என் வாழ்வும் என்
பொருட்டல்லவே..
என் கனவு, என் இலட்சியம் நீ
பொருட்படுத்தவே இல்லையே..

தினம் தோறும் வடிகிறது என் கண்ணீர்..
அனுதினமும்அழுகிறது என் கண்கள்..

என் தவறை மன்னித்து,
என் கனவை நிறைவேற்று
என் இறைவா..

திருந்திய உயிரை தண்டிப்பது,
பாவத்திலும் பாவம் என நீ
என்னை கண்டித்தது பொய்யா..

வருந்திய உயிரை வதைப்பது ஏன்.
திருந்திய உயிரை தண்டிப்பது ஏன்.
சரி தவறு புரிந்து கொண்டேன்..
நல்லது கெட்டது உணர்ந்து கொண்டேன்..

கல்வியை என்னிடம் கொடுத்து விடு..
என் இறைவா,
என்னிடம் கொடுத்து விடு..

கண்ணில் தோன்றிய
இலட்சிய தீயினை தண்ணீர்
ஊற்றி அனைப்பது
சரியா.
என் கண்ணீர் துடைத்திட
உன் கைகள் இல்லை
என்பது முறையா
இறைவா..

உன்னை அன்றி யாரை நம்பிட..
நீயே சொல் இறைவா..
என் கண்ணின் மணியில் பதிந்த
கல்வியை நீயும் பறித்து,
என்னை குருடாக்கினாய் இறைவா..

நான் அனைத்தையும் மறந்திட,
அன்பினை வளர்த்திட
பணியைக் கேட்டேன் இறைவா..

என் மனதையும் மறந்து,
என் பிரார்த்தனை மறந்து,
நீ மறுக்கின்றாய் இறைவா..

இது முறையா, இது சரியா..
சொல்லி விடு என் இறைவா..
கண்ணீரில் முத்துக்கள் கோர்த்து
மாலைகள் உனக்கு சூட்டுகிறேன்..
என் மனதையும் கொஞ்சம் புரிந்திடு
இறைவா என் இறைவா..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s