இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-9


Most-beautiful-field-of-lavender-flowers-widescreen

போன பகுதிக்கு விருப்பம் தெரிவித்த தோழமைகளுக்கு மிக்க நன்றி.. இனி இன்றைய பகுதி..

97b807d9e7d10b925906c33e2ae4b1d6

உயிரில்லை என்பார்கள்

என் காதலுக்கு..

ஏற்கிறேன்,

என் காதலால் காற்றின் உதவியின்றி

பேச முடியாது..

ஆனால்,

எத்தனை பேர் அறிந்திருப்போம்..

இந்த மரங்களின் பேச்சை..

என் காதலிடம் கெஞ்சினேன்..

எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

இறைவனிடம்,

என் கனவு நனவாக என்று..

ஒரு முறை இரு முறை அல்ல..

கண்ணில் பட்ட

பட்டை மரத்திடம் கூட பலமுறை

வேண்டி நின்றேன்..

புற்கள் முதல் புங்கை மரம் வரை

என் காதலிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன்..

எனக்காக அன்றியும்,

என் இலட்சியத்திற்காக

கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என்று..

கண்மூடித் தூங்கும் போதும்

கல்வி வேண்டும் வேண்டும்

என்று கதறி நின்றேன்..

பலருக்குத் தோன்றும்..

படிப்பென்ன தேவாமிர்தமா.. என்று..

நான் சொல்கிறேன்,

அது உண்மை தான்..

ஆனால் என்ன,

அது பலருக்கு

கையிலிருக்கும் வெண்ணெயாகவே

இருக்கிது..

எனக்கு எட்டாக் கனி தான் கல்வி..

கையருகில் உள்ள

கனியின் அருமை தெரியாது நமக்கு..

என்னைப் போன்றோர்க்கே தெரியும்,

அது எட்டாக் கனியின் அமிர்தமே என்று..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s