கானகத்தின் கதறல்


7806901_orig.jpg

கொழுத்தும் வெயிலில்
குடையாய் நிழல் தந்த மரம் – இன்று
உயிரை இழக்கும் நிலை இந்த
உலகில் வர காரணம் ஏனோ?

கண்கள் மூடி கானகம் தேடி
கருவில் உள்ள குழந்தையை கொல்வது போல்,
மாந்தர் போற்றிய மரத்தை
கொல்வது ஏனோ?

வெயில் சுட்ட வேளையில்
விலையில்லா நிழல் தந்து,
பசி என்ற பிணி பற்றிய போது
புசித்திட கனி தந்து,
காப்பாற்றிய கடவுளா – இன்று
கழுத்தறு பட்டு கிடக்கிறது..

காணும் கண்கள் கரைந்து போகும்.
என்னும் நெஞ்சம் சிதைந்து போகும்.
பற்றி பற்றி நான் விளையாடிய பட்டை மரம் – இன்று
பாதையெல்லாம் படர்ந்து கிடக்கிறது,
பாகம் பாகமாய்  நிலத்தில் வெட்டப்பட்ட படி..

நன்மையை மட்டும் கொடுத்த கடவுள் – இங்கு
கதியின்றி கிடக்கிறது..
காசுக்காக வெட்டியவன் – இங்கு
கானகம் அழிக்க துடிக்கிறான்..

மரங்கள் இல்லா காடு – காடில்லை
சுடுகாடு..
மரம் காப்போம் மானுடம் காப்போம்..

6 Comments Add yours

  1. tamilelavarasi சொல்கிறார்:

   நன்றி தோழி..

   Like

 1. Subbashini Meenakshi Sundaram சொல்கிறார்:

  Just for money and luxury we are losing our valuables,

  Liked by 1 person

  1. tamilelavarasi சொல்கிறார்:

   You are right my friend..

   Liked by 1 person

 2. chollukireen சொல்கிறார்:

  கவிதை நன்றாக இருக்கிறது. அன்புடன்

  Liked by 1 person

  1. tamilelavarasi சொல்கிறார்:

   நன்றி நண்பா..

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s