வாழ்வே வரம்..
வலியை வலியாக எண்ணாத உள்ளம்,
வாழ்வில் வழியை உருவாக்க நினைக்கின்ற வெள்ளம்..
கவலை,
கலைந்து போகும் மேகங்கள்..
வலித்தாலும் சிரிக்கும் உள்ளம்,
உளி தீண்டிய சிலை தானே..
மலை வெள்ளம் மறித்தாலும்,
கலை உள்ளம் கரையாதே..
இம்மண்ணில் வாழ்ந்தால் வேண்டும் வீரம்.
அவ்விண்ணை முட்டத் தூண்டும் தைரியம்.
கண்ணில் முட்டும் கண்ணீர் கூட,
அச்சம் கொள்ளும் உன் கண்ணைத் தீண்ட..