வாழும் போதே வாழ்வை உணர வைக்க,
நம் வாழ்க்கை எடுக்கின்ற ஆயுதமே அனுபவம்.
கிடைக்கும் போது புரியாத எதுவும்,
தொலைத்த பின்பு வருந்துவதால் கிடைத்திடாது..
வானில் உள்ள விண்மீன் கூட,
கொடுத்து விட்டுப் போகும் அழகான அனுபவங்களை..
மறந்தாலும் மறைத்தாலும் மதி நினைப்பது ஒன்றே!!!!!
கவிழ்ந்து விழுந்தால் கூட, தலை குனியா நிலை கொண்டு வாழ்வை வாழ்ந்து,
நம் அனுபவங்களை அடையாளங்களாய் மாற்றுவதே..