மனதை களவாடிடும் கண்கள்
ஏன் கொண்டாயோ கண்ணா!!
கனவில் உறவாடிய நெஞ்சம்
ஏன் பதைக்கிறது கண்ணா!!
உன் விழி வீசிய காந்தத்தில்
ஓடி வந்து ஒட்டிக் கொண்டது என் நெஞ்சம்!!
வாழ்ந்திட மட்டுமல்ல உன் மடியில்
வீழ்ந்திடவும் நீ வரம் தருவாய் கண்ணா!!
செவ்விதழ் மூடிய முத்துக்கள் தெரிய உன் புன்னகை
அருந்திட வேண்டும் என் கண்ணா!!
மனதில் மயக்கம் தந்தாய்!!
மடியில் உறங்கிட வைத்தாய்!!
கனவில் களவாடல் செய்தாய்!!
கன நேரத்தில் காணாமல் சென்றாய்.. கண்ணா!!