மதி புகுந்து மனம் கரைந்த தமிழே, உயிர் முழுதும் கரைந்தாயே..
கலைகள் பல கண் திறந்து, கடல் துளி எங்கும் கலந்தாயே…
தமிழே என் தாய் மொழியே,
கவி தாகம் தீர்க்கும் என் உயிரே,
மூச்சுக்காற்று நிறைந்தாயே – புவியின்
முதல் மொழியாய் மலர்ந்தாயே!!
உயிரும் மெய்யும் ஒன்றாக,
இவ்வுலகம் சங்கமம் என்றாக,
உயிரில் ஒன்றிய உணர்வாக – என்றும்
வாழும் தமிழே எங்கள் உயிராக..
யுகம் யுகமாய் வாழ்கின்றாய் புதுயுகமே நீயும் படைக்கின்றாய்….