எங்கள் கனவுகள்


இயற்றமிழ் இயங்கிடல் வேண்டும் – எங்கும்
பயிற்று மொழியாய் பயின்றிடல் வேண்டும்.
கற்றது தமிழ் என்று இவ்வுலகில் – நாங்கள்
மார் தூக்கி பெருமிதம் புரிய வேண்டும்.

பாரதம் போற்ற வாழ்ந்திடல் வேண்டும் – நல்ல
பாரதமே நாங்கள் செய்திடல் வேண்டும்.
ஒற்றுமையை என்றும் பற்றிடவே தான் – நாம்
கற்றிட நித்தமும் முயன்றிடல் வேண்டும்.

நம் நாட்டின் முதுகெலும்பை நிமிர்த்திடல் வேண்டும் – நன்கு
விவசாயம் செழித்திட செய்திடல் வேண்டும்.
முழு மாதமும் மும்மாரி பொழிந்திடவே – நல்ல
பழமை பெறும் மரக்கன்றுகளை விதைத்திடல் வேண்டும்.

பெண்ணியம் போற்றிடும் காலம் வேண்டும் – நம்
மண்ணியம் அறிந்திட்ட மாதர் வேண்டும்.
காலம் போற்றிடும் காதலர் வேண்டும் – நல்ல
கண்ணியம் அறிந்திட்ட ஆடவர் வேண்டும்.
கொலை களவு புரியா பூமியும் வேண்டும் – உயர்
மனிதநேயம் மிக்க மனிதர்கள் வேண்டும்.
தீமையை துறத்திடும் தைரியம் வேண்டும் – நல்ல
தற்காப்பு கலைகள் பயின்றிடல் வேண்டும்.

தொண்மை பாரதம் தோன்றிடல் வேண்டும் – அதுவே
உண்மை வாழ்வாகும்.
பழமை போற்றிடும் காலம் வரும் – அதில்
நல்ல மாற்றங்கள் நம்மையும் தேடிவரும்.

எங்கள் கனவுகள் சாமானியமே – இவை
புது சரித்திரம் படைத்திட விரைந்திடுமே.
வரைந்திடும் எல்லைகள் நமக்கில்லை – நம் கனவுகள்
பறந்திட தடையுமில்லை…

பின்னூட்டமொன்றை இடுக