உயிர் கொடுத்தாய் அம்மா..
உன் கருவில் எனை சுமக்காத போதும் – எனக்கு
உயிர் கொடுத்தாய் அம்மா..
எனக்கு யாரும் இல்லை என்ற போது,
நான் இருக்கிறேன் என்றாய்..
என் பாரம் சுமக்க தோள் கொடுத்து நின்றாய்..
என் துயர் பகிர்ந்த உந்தன்,
மரண வலி பகிர இயலாதவள் ஆனேன்.
எனக்காக அழுத உன் கண்கள்,
எனை பார்த்த படி விழித்திருக்க…
என்னை மூச்சிற்கு முன்னூறு முறை அழைக்கும்,
உன் இதழ்கள் புன்னகைத்திருக்க…
நான் அம்மா அம்மா என்று கதறியும்,
என் குரல் உன் செவி தொடாமல் மறைந்திருக்க…
பிரிந்து போகக் கண்டேன்…
என் உயிர் கலந்த உந்தன் உயிர்,
என்னை விட்டு பிரிந்து போகக் கண்டேன்…