அவள் தான் நதி – 1


ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தாள் நதி. ஒரே குழப்பமாக இருந்தாள்.

“யாராக இருக்கும் அது. நேற்று இரவு கருப்பாக ஒரு உருவம் தூரத்தில் கடந்து போனதே.”

“அம்மா நதி…”

தன் தந்தை குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் நதி.

“என்னம்மா ரொம்ப நேரமா என்னமோ யோசிச்சுட்டே இருக்க. என்னாச்சு மா. அம்மா ஞாபகாமாவே இருக்கா டா. அவ போனாலும் நம்ம கூடவே தா இருப்பா.”

அப்பாவோடு தனியே தங்கி இருக்கும் நதியின் அம்மா பத்து நாட்களுக்கு முன்பு இறந்து போனாள்.

“ம்ம்ம் பா”

என்று சொன்னவள் முகத்தில் அதிர்ச்சி மட்டும் குறையவே இல்லை. பதில் சொல்லி முடித்ததோடு சமயலறைக்குள் சென்றாள் நதி.

காலை நேரம் என்பதால் சமையல் வேலை சரியாக இருக்கும். கல்லூரி படிப்பை முடித்த நதிக்கு தாயின் இறப்பு ஒரு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியது. அவள் அம்மா உயிரோடு இருக்கும் போது வராத சொந்தங்கள் அவள் இறந்த பிறகு வந்து வந்து பார்த்துவிட்டுப் போலி இரங்கல்களை கூறிச் சென்றார்கள்.

நதியும் அப்பாவும் சாப்பிட அமர்ந்தார்கள்.

“என்னம்மா காலைல இருந்து ரொம்ப யோசனையாவே இருக்கியே. அம்மாவை பத்தி கவலை படாத மா. “

என்று முடித்தார் அப்பா.

அம்மாவை நினைத்து வேதனித்தவளாய் நதி அழுதபடி சாப்பிடாமல் அங்கிருந்து நகர்ந்தாள். அப்பாவும் அவளை சமாதானம் செய்ய முடியாமல் பிணைந்த சாதத்தில் கையை கழுவியபடி வெளியே சென்று விட்டார்.

நதியின் வீடு பல வருடங்கள் முன்பு கட்டியது. அவள் பிறக்கும் முன்பே அவள் அம்மா ஆசை ஆசையாய் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து காட்டினாள். ஆனால் இன்று அம்மா இல்லாத வீட்டில் இருள் சூழ்ந்ததை போல் தெரிந்தது.

அவள் அறையில் தனியாய் அமர்ந்து அம்மாவை பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள். அம்மா தனக்கு செய்த ஒவ்வொன்றையும் நினைத்து அழுது கொண்டிருந்தாள்.

அந்த ஒரு நொடி பகல் கூட இருள் போல மாறி நதியை பயமுறுத்தியது. பயந்து போன நதி அம்மா அம்மா என்று மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டே திரும்பினாள்.

படாரென்று எதிர் நின்றது அந்த கருப்பு உருவம். அதை கண்டு அலறினாள் நதி. “அது அது அதே கருப்பு உருவம் தான்.” என்று தனக்குள்ளே நடுங்கினாள்.

அவள் சத்தம் வெளி வரும் முன்பே நதி அங்கிருந்து தூக்கி எறியப்பட்டாள். அந்த கருப்பு உருவம் அவள் காலை பிடித்து இழுத்துக்கொண்டே ஒரு காட்டிற்குள் சென்று மறைந்தது. அதிர்ச்சியில் மயங்கிய நதி எழுந்து பார்த்தால் அது ஒரு சூனிய காரனின் சுடுகாடு.

தொடரும்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s