அவள் தான் நதி -3


யாரோ அவள் கால்களின் அடியில் இருந்து மண்ணுக்குள் இழுப்பது போல் தோன்றியது.. படாரென்று நிலத்தின் அடியில் இழுத்துக் கொண்டே போனது.. முடிவில்லாமல் போய்க் கொண்டே இருந்தது..

அந்த நிமிடம் ஒரு உருவம் அவள் கையை பிடித்துக் கொண்டது..

“யாரது யாரது…”

என்று இடைவிடாமல் அலறினாள் நதி. அலறி ஓய்ந்து அமைதியானாள்.. அந்த கரு கும்மிருட்டில் என்ன நடக்கிறது என்றே நதிக்கு புரியவில்லை.. என்ன என்று யூகிப்பதற்குள் அவள் கைகளை பிடித்திருந்த ஒன்று அவள் கைகளை விட்டு விட்டது..

சிறிது நொடிகளில் ஒரு இடத்தில் வந்து விழுந்தாள்.. அரை உயிரை இழந்தவளாய், தடுமாறி எழுந்து உட்கார்ந்தாள்.. பார்த்தாள்… அவளை சுற்றிலும் குகைகளாய் தெரிந்தது..

“அய்யோ கடவுளே நா யாருக்கு என்ன பாவம் செய்தேன்.. எனக்கு ஏன் இந்த நிலை..” என்று அழுது கொண்டு அதே இடத்தில் அமர்ந்தாள்.. அந்த இடம் முழுவதும் மின்மினி பூச்சியின் வெளிச்சத்தால் நிறைந்திருந்தது..

அந்த வெளிச்சத்துக்கு பின்னால் யாரோ நிற்பது போல் தெரிந்தது..

“ஐயோ இந்த வேதனைக்கு பேசாமல் என்னை கொன்றுவிடுங்களேன்.” என்று உரக்கக் கத்தினாள்..

“யார் நீ”

ஒரு மென்மையான ஆண்குரல் அவள் காதுகளில் கேட்டது. நிமிர்ந்து பார்த்தாள்..

அது ஒரு அழகான ஆண்.. மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தில் அவன் முகம் அவ்வளவு அழகாக தெரிந்தது.. பார்த்த நொடியில் அவள் மனதில் என்னமோ செய்தது.. பார்வையில் ஆயிரம் காந்தம்.. அவன் இதழில் ஒரு அழகான குறுஞ்சிரிப்பு.. உயிர் பிழைப்போமா இல்லை சாவோமா என்று கூட தெரியாத போதும் அவன் மீது ஈர்ப்பு கொண்டாள்..

இருப்பினும் சுயநினைவை இழக்காதவளாய் சிந்திக்க தொடங்கினாள்..

“ஏதோ 1000 அடி பள்ளத்திற்கு கீழே இருப்பது போல் தோன்றுகிறது.. இவன் யார் ஆக இருப்பான் மனிதனா இல்லை பேயா எதுவாக இருக்கும்..” சுதாரித்துக்கொண்டு வினவ தொடங்கினாள்..

“முதலில் நீ யார் என்று சொல். இங்கு என்ன செய்கிறாய்? இவ்வளவு அடி ஆழத்தில் நீ எப்படி வந்தாய்

நதியின் கேள்விகள் அவன் செவிகளை தொடாதவனாய், அவள் விழிகளில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான் அவன்..

தொடரும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s