
குகைக்கு வெளியே வந்தார்கள்.. ஆஆஆஆ என்று அலரினாள் நதி..
அந்த குகைக்கு வெளியே வந்த வெளிச்சத்தை பார்த்து நம் உலகத்திற்கு வந்து விட்டோம் என்று நினைத்த நதிக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி..
அவள் அவள் பார்த்தது மனித உலகத்தை அல்ல.. சாத்தான்களின் சாம்ராஜ்யம்..
குகைக்கு வெளியில் அவள் நினைத்ததை போல் தெரிந்தது வெளிச்சம் அல்ல... வெண்மை நிற உடை அணிந்த கொடூர ஆவிகள் கோடிக்கணக்கில் மொய்த்துக் கொண்டிருந்தன.. ஊசி போல பற்கள்.. கிழிந்து போன முகம்.. வாய் முழுக்க இரத்தம்.. கொடூரமான தோற்றத்தைப் பார்த்து அலறினாள் நதி..
“கத்தாதே நதி பயப்படாதே.. இந்த சாத்தான்கள் நம்மளை ஒன்னும் பண்ணாது.. அதாவது உயிரோடு இருக்கும் மனிதர்கள் அவங்கள தொந்தரவு செய்யாத வரைக்கும் அதுங்க நம்மளை ஒன்னும் பண்ணாது.. அதுங்களுக்கு ஏதாவது தீங்கு செஞ்சா அது நம்மள கொடூரமாக கொன்று சாப்பிடும்..”
“அப்போ எதுக்காக இத்தனை சாத்தான் கூட்டம் இங்க சுத்திட்டு இருக்கு..”
“கொஞ்சம் வலது பக்கமா பாரு..”
அங்கு அவள் கண்கள் கண்டதை தானே ஒரு துளியும் நம்ப முடியவில்லை.. ஏனென்றால் அவள் பார்த்தது ஒன்றல்ல இரண்டல்ல, எண்ணவே முடியாத அளவிற்கு ஆத்மாக்கள் தனித்தனியாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தன..
அனைத்து ஆத்மாக்களுமே ஒன்றுமே அறியாத சாதாரண மனித ஆத்மாக்கள்..
மலைத்துப் போய் நின்றால் நதி..
“இவங்க எல்லாரையும் எதுக்காக இங்க அடைச்சு வெச்சிருக்காங்க..”
“அதாவது நதி, உலகத்தில் வாழும் எல்லா உயிர்களுமே தன்னோட ஆயுட்காலம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் வாழ்ந்த உடலை விட்டுட்டு பிரிந்து வானுலகத்திற்கு போய்விடும்.. ஆனா இந்த சாத்தான்கள் என்ன பண்ணும்னா அப்படி முக்தியடைய போற ஆத்மாக்களை எல்லாத்தையும் சிறைப்பிடித்து வந்து இங்கே அடைச்சு வைத்து விடும்..”
“அதுதான் ஏன்னு கேக்குறேன்..” என்று கோபமாக கேட்டாள் நதி..
“சொல்றேன் சொல்றேன்.. ஏன்னா இந்த சாத்தான்களோட உணவே அந்த ஆத்மாக்கள் தான்..”
திகைத்துப் போனாள் நதி..
தொடரும்……