அவள் தான் நதி-6


Horror-scary-ghost-story-in-tamil

அதுதான் ஏன்னு கேக்குறேன்..” என்று கோபமாக கேட்டாள் நதி..

“சொல்றேன் சொல்றேன்.. ஏன்னா இந்த சாத்தான்களோட உணவே அந்த ஆத்மாக்கள் தான்..” திகைத்துப் போனாள் நதி…

ஒன்றுமே புரியாதவளாய், மனதில் குழப்பம் நிறைந்தவளாய், மிகுந்த பயத்தோடு அங்கும் இங்கும் கண்களை அலைய விட்டு கொண்டிருந்தாள்..

“ஆமா, இப்படிப்பட்ட எடத்துல நீ மட்டும் எப்படி தனியா தைரியமா இருக்க. உன்கூட மனுஷங்க யாருமே இல்லையா? இல்லை நீயே மனுஷன் இல்லையா?.. என்று அச்சத்தோடு கேட்டால் நதி..

“ஹாஹாஹாஹா…..” என்று இடைவிடாத அவன் சிரிப்பில் மேலும் பீதி அடைந்தாள்..

“அதெல்லாம் ஒன்னும் இல்ல நானும் உன்னை மாதிரி மனுஷன் தான்.. என்னுடைய இடத்துக்கு நீ வந்து பாரு அப்போ உனக்கு எல்லாமே புரியும்..” என்று விளக்க முயன்றான் அவன்..

“சரி உன் கூட வருவதை தவிர இப்ப எனக்கு வேற எந்த வழியுமே இல்ல.. உன்ன நம்பி தான் வரேன்.” என்று அரை மனதோடு ஒப்புக்கொண்டாள்..

அடைத்து வைக்கப்பட்ட ஆத்மாக்களிடம் தன் பார்வையை செலுத்தியவளாய் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து போனாள்.. அவள் தங்களைக் கடந்து போவதை பார்த்த அத்தனை ஆத்மாக்களும் தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த சிறிய கண்ணாடி கூண்டினை சுற்றிச் சுற்றி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தன…

ஒன்றுமே புரியாதவளாய் கடந்து போகிறாள் நதி..

சிறிது தூரம் கடந்து போன பிறகு அங்கு ஒரு நீர் பரப்பு தென்பட்டது.. அதன் அருகில் வந்து நின்றார்கள் இருவரும்..

“ரொம்ப தாகமா இருக்கு இந்த தண்ணீரை நான் இப்பவே என் தாகம் தீர வரைக்கும் குடிக்க போறேன்..” என்று சொல்லிக் கொண்டு அந்த நீரை குடிக்க ஓடினாள்..

அவள் அந்த நீரை குடிப்பதற்குள், நதியின் கையை பிடித்து இழுத்தான் அவன்..

“குடிச்சு விடாத இது தண்ணி இல்ல.. கொஞ்சம் உன் கைகளில் எடுத்து பாரு.. ” அந்த நீர் அவள் கைகளை நணைக்கவே இல்லை..

“இது என்ன ஆச்சரியமா இருக்கு.. இது தண்ணி தானே.. தாகத்துக்கு இங்க தண்ணி கூட கிடைக்காதா.. அப்போ என்னோட வாழ்க்கை அவ்வளவு தானா.. இந்த நரகத்தில் இப்படியே கடைசி வரைக்கும் வாழ்ந்து இங்கேயே செத்துப் போக வேண்டியது தானா..” என்று விம்மி விம்மி அழுதாள்..

சமாதானம் செய்த அவன், அவள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான்..

“என்னோடு வா நதி..” என்று நீருக்குள் இறங்க ஆரம்பித்தான்..

“என்ன எங்க கூட்டிட்டு போற… தண்ணிக்குள்ள என்னால மூச்சுவிட முடியாது.. இப்படியே செத்துப் போக சொல்றியா..” என்று பிடிவாதம் காட்ட ஆரம்பித்தாள்.

“நான் சொன்னது அதுக்குள்ள மறந்துட்டியா நதி.. இது தண்ணீரே கிடையாது நம்பிக்கையோடு என்னோடு வா… என்னுடைய இடத்துக்கு நான் உன்ன கூட்டிட்டு போறேன்… அதுதான் உனக்கு பாதுகாப்பு.. தயவு செஞ்சு என்னை நம்பு நதி.. நான் உனக்கு நல்லது தான் நினைக்கிறேன்..” அவன் கண்களில் ஏதோ ஒரு உண்மையை பார்த்தவளாய் அவனோடு அந்த மாய நீருக்குள் இறங்கினாள் நதி…

தொடரும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s