அவள் தான் நதி -7


horror-image

“நான் சொன்னது அதுக்குள்ள மறந்துட்டியா நதி.. இது தண்ணீரே கிடையாது நம்பிக்கையோடு என்னோடு வா… என்னுடைய இடத்துக்கு நான் உன்ன கூட்டிட்டு போறேன்… அதுதான் உனக்கு பாதுகாப்பு.. தயவு செஞ்சு என்னை நம்பு நதி.. நான் உனக்கு நல்லது தான் நினைக்கிறேன்..” அவன் கண்களில் ஏதோ ஒரு உண்மையை பார்த்தவளாய் அவனோடு அந்த மாய நீருக்குள் இறங்கினாள் நதி…

அவர்கள் நீருக்குள் இறங்க இறங்க அவள் உருவம் மறைவது போல் உணர்ந்தாள்.. இருவரும் முழுவதுமாய் அந்த மாய நீருக்குள் மூழ்கிப் போனார்கள்..

நீரின் அடியில் ஏதோ படிக்கட்டு போல் தென்பட்டது. அந்த நீளமான படிக்கட்டுகளில் இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்..

சிறிது தூரம் கடந்த பின்பு தொலைவில் ஏதோ ஒரு கட்டிடம் போல் மங்கலாக தெரிந்தது நதியின் கண்களுக்கு.. அந்தக் கட்டிடத்தை நோக்கி இருவரும் சென்றுகொண்டிருந்தார்கள்..

அந்த கட்டிடத்தின் அருகில் செல்லச் செல்ல நதியின் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.. ஏனென்றால் அவள் பார்ப்பது ஒரு சாதாரண கட்டிடம் அல்ல.. அது ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி மாளிகை.. ஆயிரம் ஆயிரம் கோடி மக்களை ஆட்சி செய்யும் அரசனின் பெரும் கோட்டையை போல் தெரிந்தது…

பிரமித்துப் போனாள் நதி.. அவள் கண்கள் ஒரு நிமிடம் இமைப்பதைக் கூட மறந்து போனது..

அந்த மாபெரும் கோட்டையின் வாயிலை மிதித்த உடன் அவன் அணிந்திருந்த அந்த சாதாரண உடை திடீரென ஒரு இளவரசனைப் போல் தோற்றம் பெற திகைத்து நின்றாள் நதி…

என்ன நடக்கிறது என்று நதியால் துளியும் புரிந்து கொள்ள முடியவில்லை.. எதுவுமே பேச இயலாதவளாய் மௌனம் என்ற மொழியில் பேசிக் கொண்டிருந்தாள் மனதிற்குள்…

“வா நதி ஏன் இங்கேயே நின்றுவிட்டாய்.. உள்ளே வா..” என்று அவன் நதியை அழைத்துக்கொண்டு அந்த கண்ணாடி மாளிகைக்குள் சென்றான்..

அந்த மாளிகைக்குள் இல்லாத பொருட்களே இல்லை.. அவ்வளவு அலங்காரமாய் தென்பட்டது அந்த மாளிகைக்கு உள்ளே.. அந்த மாளிகையின் வலது முன்பக்கம் ஒய்யாரமான உணவருந்தும் மேசை அமைந்திருந்தது…

அதில் அறுசுவை உணவுகளும் அனைத்து பழ வகைகளும் பரிமாறப்பட்டு இருந்தன.. நதியின் கையை பிடித்துக்கொண்டு சாப்பிட அழைத்துச் சென்றான் அவன்.. இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.. அதிர்ச்சியிலிருந்து வெளிவராதவளாய் ஓரிரு பழங்களை சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைய தாகம் தீர தண்ணீர் அருந்திவிட்டு எழுந்து நின்றாள் நதி..

உணவு சாப்பிட்டு முடித்து அவளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான் அவன்..

தொடரும்…..

2 Comments Add yours

  1. ramanshitha7 சொல்கிறார்:

    அற்புதம் அக்கா உங்களது கர்ப்பணை வளத்தை கண்டு வியக்கிறேன் . என்ன ஒரு சுவாரசியமான தொடர்.

    Liked by 1 person

    1. tamilelavarasi சொல்கிறார்:

      நன்றி அழகி…😄

      Like

பின்னூட்டமொன்றை இடுக