அவள் தான் நதி-9


horror story images

“அந்த அறையில் உன்னை இறுக கட்டிப் பிடித்துக் கொண்டது வேறுயாருமல்ல உன் அம்மா”..

பேரதிர்ச்சியில் உறைந்து போனாள் நதி…… அவளின் அதிர்ச்சி தெளிய சில நிமிடங்கள் தேவைப்பட்டது..

மயான அமைதி..

திடீரென்று நதி பித்துப் பிடித்தவள் போல் ஓட ஆரம்பித்தாள் அந்த புகை மூட்டம் நிறைந்த அறைக்கு.. அவனும் பின் தொடர்ந்தான்..

அம்மா அம்மா என்று இடைவிடாமல் ஓலமிட்டு அழுதுகொண்டே தன் அம்மாவை அழைத்துக் கொண்டிருந்தாள்...

“எனக்கு இருந்த பயத்துனால என் தாயோட ஸ்பரிசத்தை கூட என்னால உணர முடியாமல் போயிருச்சே…. உன்ன என் மனதோட வலி தீரும் வரைக்கும் கட்டிப்பிடிச்சு அழுகனும் அம்மா….என்று கதறி அழுதாள் நதி..

அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரில் ஒரு துளி காற்றில் மிதக்க ஆரம்பித்தது… அதைப் பார்த்த நொடி அழுகையை மறந்து மிதக்கும் கண்ணீரில் தன் கவனத்தை செலுத்தினாள்…

சிறிது நொடிகளில் அந்த மிதக்கும் கண்ணீரை பிடித்திருக்கும் நிழல் உருவ கை விரல்கள் தெரிய ஆரம்பித்தது…

“அம்மாஆஆஆ அம்மாஆஆஆ நீ வந்துட்டியா..” என்று ஆவல் தீர தன் தாயை கட்டி அணைத்தாள் நதி…

“என்னை விட்டு நீ ஏன் அம்மா போனாய்உன்னை நான் இந்த இடத்தில் சந்திப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கல… நீ வாம்மா நம்ம வீட்டுக்கு போலாம்… எனக்கு இங்க ரொம்ப பயமா இருக்கு.. இங்க என்ன என்னவோ நடக்குது.. வா போலாம்….” இன்று கட்டியணைத்த உருவத்தின் கைகளை பிடித்து இழுக்க ஆரம்பித்தாள்..

“அம்மா நதி கொஞ்சம் பொறுமையாக இரு.. ஒரு விஷயம் நன்றாக புரிந்து கொள்.. கடைசியாக நீ என்னை பார்த்தபோது என் உடலில் உயிர் இல்லை.. ஆனா இப்போ என் உயிர் இங்கே இருக்கு ஆனால் என் உயிருக்கு உடல் இல்ல…”

நதி தன் தாயின் கைகளைப்பிடித்து இழுப்பதை நிறுத்திவிட்டு ஒரு நாழிகை மௌனமானாள்…

நதி அமைதியாக பேச ஆரம்பித்தாள்.. “அம்மா எனக்குள்ள நிறைய கேள்விகள் இருக்கு.. நான் எதுக்காக இங்க வந்தேன்? என்ன சுத்தி இங்கே என்ன நடக்குது? என்ன கூட்டிட்டு வந்த இவன் யாரு.. எனக்கு ஒண்ணுமே புரியல அம்மா…”

“நதி உன்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் விடை உனக்குள்ளே தான் இருக்கு.. அது போக போக உனக்கே புரியும்.”

“இல்லம்மா எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். நான் எதுக்கு இங்க வந்தேன்?…”

அதற்கு அவள் அம்மா சொன்ன பதில், “உன் உடலையும் உயிரையும் தனியாகப் பிரிப்பதற்கு…”

நெஞ்சடைத்து நின்றாள் நதி..

தொடரும்…

2 Comments Add yours

 1. ramanshitha7 சொல்கிறார்:

  ஐயோ! ஒரு நிமிடத்தில் உடல் சிலிர்த்து விட்டது! அந்த கடைசி வரியை கேட்டதும்!?!

  Liked by 1 person

  1. tamilelavarasi சொல்கிறார்:

   ம்ம்ம்.. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்…😄

   Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s