அவள் தான் நதி – 10


aval thaan nadhi horror story blog tamil

“இல்லம்மா எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். நான் எதுக்கு இங்க வந்தேன்?…”

அதற்கு அவள் அம்மா சொன்ன பதில், “உன் உடலையும் உயிரையும் தனியாகப் பிரிப்பதற்கு…”

நெஞ்சடைத்து நின்றாள் நதி..

“என்னம்மா சொல்ற… நான் அப்ப இறந்து போறதுக்கு தான் இங்க வந்தேனா..

“அவசரப்படாதே நதி… நான் உன்னோட அம்மா.. உன்ன கொல்லனும்னு நான் நினைப்பேனா...? இது ஒரு யுத்தம் மா.. ஆத்மாவுக்கும் சாத்தானுக்கும் இடையில் நடக்கிற ஒரு பெரிய யுத்தம்.. இதுல ஒவ்வொருமுறையும் சாத்தான்கள் ஆத்மாக்களை கொன்னுட்டே இருக்கு... முக்தியடைய போற ஆத்மாக்கள் இந்த சாத்தான்களின் உணவாக உயிர் இழந்துட்டே இருக்கு..

“ஐயோ உயிர் உடலைவிட்டுப் பிரிந்து அதுக்கப்புறமும் இவ்வளவு சித்திரவதை படுதா?… ஆனா, அதுக்கு நான் என்னம்மா பண்ண முடியும்… எல்லாரும் இறந்ததுக்கு அப்புறம் இங்க வந்து கஷ்டப்படுறாங்க. ஆனா நான் இறக்கறதுக்கு முன்னாடியே இப்படி ஒரு கஷ்டத்தை அனுபவிக்கனுமா. என்னால தாங்க முடியல மா..”

“இல்ல நதி… நீ யோசிக்கிறது ரொம்ப தப்பு… நீ இவ்வளவு வேதனையை தாண்டி வந்ததுனால நீ ஒரு பயத்துல பேசிட்டு இருக்க… நான் உன்ன இப்படி கோழையா வளர்க்கல… “

” அது சரி அம்மா.. கொஞ்சம் முன்னாடி சொன்னீங்களே என்னோட உடம்பையும் உயிரையும் தனியா பிரிக்கறதுக்கு தான் இங்கே வர வெச்ச என்று சொல்லி..”

“நான் உனக்கு தெளிவா சொல்றேன் நதி பொறுமையா அமைதியா கேளு”

“ம்ம் சொல்லுமா..” என்று தோய்ந்து போன குரலில் சொல்லிவிட்டு நதி அமர்ந்தாள்..

“நான் இறந்த உடனேயே என்னுடைய ஆயுட்காலம் முடிஞ்சு நான் முக்தியடைய போற ஆத்மாவா மேல் உலகத்துக்கு போக தயாராக இருந்தேன்… ஆனால் ஏதோ ஒன்னு என்ன இந்த ஆழமான நிலத்துக்கடியில் இழுத்துட்டு வந்திருச்சு.. இங்க வந்து பார்த்ததுக்கு அப்புறம்தான் புரிஞ்சது… இது சாத்தான்கள் வாழ்ற ஒரு இடம்.. இங்கே முக்தியடைய போற ஆத்மாக்களை எல்லாம் கடத்திட்டு வந்து சாத்தான்கள் தங்களோட சக்தியை அதிகரித்து கொள்வதற்காக ஆத்மாக்களை கொடூரமா கொன்று அவங்களோட சாத்தான் கடவுளுக்கு பலி கொடுக்கிறார்கள்.. இதனால இந்த சாத்தான்கள் அழிவே இல்லாம அசுர சக்தியோட வாழ முடியும்.. அதுக்காக தான் இந்த ஆத்மாக்களை இங்கே கொண்டுவந்து அடைச்சு வெச்சிருக்காங்க… இத இங்க வந்த உடனேயே நான் புரிஞ்சுகிட்டேன் மா… ஏதாவது உதவி கிடைக்குமா என்று தேடினேன்… எந்த வழியுமே இல்லாதபோது கடவுள் காட்டிய வெளிச்சம் போல இந்த மனுஷனை இந்த இடத்துல நான் சந்தித்தேன்.. என்னை பார்த்ததுமே இவருக்கு என்ன தோணுச்சுன்னு தெரியல.. அடைப்பட்டு இருக்கிற அத்தனை ஆத்மாக்களுக்கும் மத்தியில என்ன மட்டும் காப்பாற்றி இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்து எனக்கு பாதுகாப்பான ஒரு அறையும் சாத்தான்கள் கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலையையும் உருவாக்கி கொடுத்தாரு.. அதுக்கு அப்புறம் தான் நான் என்னோட உணர்வுகள் மூலமா நம்ம வீட்டுக்கு வந்து உன்ன இங்க வர வச்சேன்.. எனக்கு தெரியும் நீ கொஞ்சம் பயந்துகுவ அப்படின்னு.. ஆனாலும் எனக்கு தெரியும் உன்னால் சாதிக்க முடியும்னு.. ” என்று சொல்லி முடித்தது நதியின் அம்மா ஆத்மா…

“அது சரி அம்மா… இதெல்லாம் எனக்கு புரிஞ்சுது… ஆனா நான் எதுக்கு இங்க வந்தேன்… நீங்க நினைக்கிற மாதிரி என்னால என்ன செய்ய முடியும்”

“இன்னுமா உனக்கு புரியலை… உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. எங்க எல்லாரையும் காப்பாற்ற போறதே நீதான்…

ஒன்றின்மேல் ஒன்றாக அதிர்ச்சி வரவும் ஆடிப் போய் நின்றால் நதி..

“உன்னோட அம்மா மாதிரி எத்தனையோ ஆத்மாக்கள் இங்கே சித்திரவதை அனுபவித்துவிட்டு இருக்கு… நான் முதல்ல சொன்ன மாதிரி, முதலில் உன்னுடைய உடலையும் உயிரையும் தனியாக பிரிக்கணும்… அப்படி இருந்தால்தான் அந்த ஆத்மாக்கள் ஓட நீ போரிட முடியும்..

“நானா…..”

“நீயேதான் நதி…” என்று அவன் குரல் இடையில் ஒலித்தது..

“உன் சந்தேகத்திற்கு நான் பதில் தருகிறேன் நதி.. உன் பிறப்பே சாத்தான் களிடமிருந்து ஆத்மாக்களை காப்பாற்றுவதற்கு தான்… உனக்கு துணையாக படைக்கப்பட்டவனே நான்... உன் அம்மாவை நான் காப்பாற்றியதற்கு காரணமும் இதுதான்.. உன்னை இந்த இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்ததற்கு காரணமும் இதுதான்...

“ஆமாம்மா நதி.. உன்னால மட்டும் தான் இங்கு அடைபட்டு இருக்கும் அத்தனை ஆத்மாக்களுக்கும் காப்பாற்ற முடியும்… எனக்கு நல்லா தெரியும் நான் உன்ன கோழையா வளர்க்கல…” இன்று நதியின் அம்மா கூறினார்…

நதியின் தாய் குரல் மறையும் முன்னே அடுத்த கணத்தில் உரைத்தால் நதி.. “என் உடலையும் உயிரையும் தனியாக பிரிக்க தயார் பண்ணுங்க”…

தொடரும்….

4 Comments Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s