அவள் தான் நதி இறுதி அத்தியாயம்


தாமதமான பதிவிற்கு மன்னியுங்கள் தோழமைகளே…

நதியின் தாய் குரல் மறையும் முன்னே அடுத்த கணத்தில் உரைத்தாள் நதி.. “என் உடலையும் உயிரையும் தனியாக பிரிக்க தயார் பண்ணுங்க”…

என்று உத்தரவிட்டாள் நதி…

நதி சொன்ன அடுத்த கணத்தில் அவளின் கையைப் பிடித்து வேகமாக இழுத்துக்கொண்டு ஒரு இடத்திற்கு சென்றான் அவன்.. அவள் அம்மாவின் ஆத்மாவும் அவர்களை பின்தொடர்ந்தது..

அவன் அழைத்துச் சென்றது ஒரு புத்தகங்கள் நிறைந்த அறைக்கு.. அங்கு மிகுந்த பாதுகாப்போடு ஒரு செப்பேடு வைக்கப்பட்டிருந்தது.. அந்த செப்பேட்டில் நிறைய மந்திரங்களும் வரைபடங்களும் செதுக்கப்பட்டிருந்தது..

ஒரு அரியாசனத்தில் நதியை அமர வைத்தான் அவன்.. அதன்பின்பு அந்த செப்பேட்டில் உள்ளது போல அவன் சுற்றுப்புறத்தை மாற்றிக்கொண்டான்.. அதன் நடுவில் அந்த செப்பேட்டினை பதித்து வைத்தான்.. அதிலுள்ள அனைத்து மந்திரங்களையும் மனசார உச்சரித்துக் கொண்டே இருந்தான்.. பிறகு ஒரு கூரிய வாளினை எடுத்து அதில் நதியின் அம்மாவின் ஆத்மாவை பதியச் செய்து நதியின் நடு நெற்றி பொட்டில் இறக்கினான்.. அவளுக்கு ஒரு சிறுதுளி காயம் கூட ஏற்படவில்லை.. அப்படியே மயங்கினாள் நதி..

சிறிது நேரத்தில் அந்த மாளிகையின் அனைத்து இடங்களிலும் பிரகாசம் ஒளி வீச ஆரம்பித்தது.. அந்த ஒளியின் வெளிச்சம் பாதாள உலகத்தையே ஒரு நிமிடம் இருள் மறையச் செய்தது…

ஒளியின் நடுவில் உதயமானது நதியின் ஆத்மா.. நதியின் உடலைவிட்டு பிரிந்த நதியின் ஆத்மாவிற்கு ஏழு ஜென்ம பலமும் கிடைத்து அக்னி தேவதையைப் போல் காட்சியளித்தது..

நதியின் பயமும் குழப்பமும் காணாமல் போனது.. அடுத்து என்ன செய்யவேண்டும் என்கிற தெளிவும் துணிச்சலும் அவளின் ஆத்மாவிற்கு இருந்தது..

பாதாள உலகத்தில் தெரிந்த அந்த பிரம்மாண்ட வெளிச்சத்தை அங்குள்ள சாத்தான்களும் உணர ஆரம்பித்தது.. அவர்களுக்கு ஏதோ தீமை நடக்கப் போகிறது என்று புரிந்து கொண்டன அந்த சாத்தான் கூட்டம்..

உடனே அந்த வெளிச்சத்தின் தொடக்கத்தை நோக்கி சாத்தான் கூட்டம் விரைந்தது.. அந்த சாத்தான் கூட்டம் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே நதியின் ஆத்மா அவர்களின் எதிரில் நின்றது..

கோரமான உருவம் கொண்ட மொய்க்கும் பல சாத்தான்கள் மத்தியில் நதியின் ஆத்மா துணிச்சலாக நின்றது..

சாத்தான்கள் அவளின் பிரகாசத்தை பார்த்து ஒரு நிமிடம் அரண்டு போய் நின்றன.. இருப்பினும் அவைகள் “இப்படி ஒரு அதீத சக்தி உடைய ஆத்மாவை நம் சாத்தான் கடவுளுக்கு பலி கொடுத்தால் நாம் கண்டிப்பாக நம் சக்தியை மேல் உலகத்துக்கும் கொண்டு செல்ல முடியும்” என்று நினைத்துக் கொண்டன… அதனால் நதியின் ஆத்மாவை சாத்தான் கடவுளுக்கு பலி கொடுக்க முடிவு செய்தன சாத்தான் கூட்டம்..

அனைத்து சாத்தான்களும் ஒன்றாக சேர்ந்து நதியின் ஆத்மாவை கைப்பற்ற பாய்ந்தது.. நதி ஆத்மாவின் பிரகாச வெளிச்சத்திற்கு முன்னாள் சாத்தான்கள் அனைத்தும் சாம்பலாகின.. ஆனால் சாம்பலான சாத்தான்கள் அனைத்தும் மீண்டும் உருவம் பெற்றன..

நதி ஒரு நிமிடம் குழம்பி விட்டாள்.. “நம் ஆத்மாவின் பிரகாசமே இவைகளை அழித்து விடுமே, என்னவாயிற்று சாம்பலான பின்பு மீண்டும் சாத்தான்கள் எழுந்து நிற்கின்றன. இதை எப்படி நான் சமாளிக்க போகிறேன்” என்று கண் மூடி ஒரு நிமிடம் சிந்திக்க தொடங்கினாள்..

அவளின் ஞாபகத்தில் அவள் அம்மாவின் ஆத்மா சொன்னது “உன்னோட பிரகாசம் மட்டும் போதாது அந்த சாத்தான்கள அழிக்கிறதுக்கு.. அழிஞ்சு போன அத்தனை சாத்தான்களும் மறுபடியும் உயிர் பெற்று வரும்.. அந்த சாத்தான்களை எல்லாம் அழிக்க இருக்கும் ஒரே வழி என்னன்னா அந்த சாத்தான் கடவுளோட சிலைக்கு அடியில் இருக்க ஒரு மண்டையோட்டு எலும்ப நீ உடைக்கணும்.. ஆனால் அது அவ்வளவு சாதாரணம் இல்லை நதி.. சாத்தான்களே இவ்வளவு வலிமையா இருக்குதுனா அந்த சாத்தான் கடவுளோட சிலைக்கு அடியில் இருக்கிற அந்த மண்டையோடு எவ்வளவு சக்தி உடையதாக இருக்கும்னு நீ யூகிச்சுக்கோ… உன்னோட ஆத்மாவே அழிஞ்சாலும் சரி அந்த மண்டையோடு எலும்ப நீ சுக்குநூறா ஒடைச்சுடு.. உனக்கு துணையா நா கூடவே இருப்பேன் நதி..

என்று சொல்லி முடித்தது நதி அம்மாவின் ஆத்மா..

சாத்தான்கள் தன்னிடம் நெருங்கி வர நதி அமைதியாக இருந்தாள்.. அந்த சாத்தான் கூட்டம் நதியை சிறை பிடித்தது..

சிறைப்பிடித்த நதியின் ஆத்மாவை சாத்தான்களின் கடவுளுக்கு பலி கொடுப்பதற்காக தயார்செய்து சாத்தான் கடவுளுக்கு முன்பு நிற்கச் செய்தது..

இது தான் சந்தர்ப்பம் என்று நினைத்து தனது சிறையை உடைத்து விட்டு, சாத்தான் கடவுளின் சிலைக்கு அருகில் சென்றால் நதி.. அந்த சாத்தான் கடவுளின் சிலையை தொட்ட உடனே தூக்கி எறியப்பட்டது நதியின் ஆத்மா..

அவளால் அந்த சிலையை நெருங்க கூட முடியவில்லை.. மீண்டும் அவள் ஆத்மாவை சிறை பிடித்தது சாத்தான் கூட்டம்.. ஒரு நொடியில் பலவீனமாகி போனது நதியின் ஆத்மா..

அவளின் ஆத்மாவை பலி கொடுப்பதற்காக சாத்தான் கூட்டம் ஓலமிட்டுக் கொண்டே அவளின் அருகில் சென்றது.. கூரிய நகங்களாலும் பற்களாலும் நதியின் ஆத்மாவை பிய்த்து பலி கொடுக்க ஆரம்பத்தன சாத்தான் கூட்டம்..

கண்ணை மூடி இறுக அமர்ந்தாள் நதி.. நதியின் ஆத்மா தள்ளி விடப்பட்டது.. அவளின் ஆத்மாவிற்கு பதிலாக அந்த சாத்தான்கள் அவனின் ஆத்மாவை பலி கொடுத்துக் கொண்டிருந்தது.. நதியின் ஆத்மாவை அவள் உடலிலிருந்து பிரிக்கும்போது அவனும் அவனது ஆத்மாவை பிரித்துக் கொண்டான்.. நதியை காப்பாற்றுவதற்காக அவன் நதியைத் தள்ளிவிட்டு சாத்தான் கடவுளுக்கு அவன் தன்னை தானே பலியாக்கினான்..

இதை கண்ட நதி ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றாள்.. தெரிந்தோ தெரியாமலோ அவன்மீது ஈர்ப்பு கொண்டிருந்த நதியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. தனது ஆத்மாவின் முழு சக்தியையும் ஒன்று திரட்டி தனது சிறையை உடைத்து விட்டு சாத்தான் கடவுளின் சிலையை எட்டி உதைத்தாள் நதி.. உடைந்து போய் விழுந்தது சாத்தான் கடவுளின் சிலை..

சாத்தான்கள் ஒரு நிமிடம் உறைந்து போய் நின்றன.. மண்ணுக்கு அடியில் வெறிபிடித்தவள் போல் தோன்ற ஆரம்பித்தால் நதி.. அவள் கைகளில் சிக்கியது அந்த மண்டையோடு.. சாத்தான் கடவுளின் கையில் வைத்திருந்த அந்த ஆயுதத்தை எடுத்து சுக்குநூறாக உடைத்தாள் அந்த மண்டை ஓட்டை.. சாத்தான்கள் அனைத்தும் பொடி பொடியாய் நொறுங்கிப் போயின..

சிறைப்பட்ட அனைத்து ஆத்மாக்களும் விடுவிக்கப்பட்டன.. ஆத்மாக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு மேல் உலகத்திற்கு முக்தியடைய சென்றன.. அவள் அம்மாவின் ஆத்மாவும் நதியை கட்டியணைத்துக் கொண்டு “செல்கிறேன் நதி” என்று கூறி மேல் உலகத்துக்கு செல்ல ஆரம்பித்தது.. நதியின் உடலும் ஆத்மாவோடு இணைந்தது..

ஆனால் நதியால் அவனது இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவன் பெயர் கூட அறியாமல் அவன் மீது காதல் கொண்டு இருந்தாள் நதி..

அவள் அருகில் ஒரு வெளிச்சம் தோன்றியது.. அதனை நோக்கி திரும்பி நடந்தால் நதி.. அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.. அவள் அப்பாவை கண்டதும் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டாள் தன் தந்தையை..

“நீ எங்கம்மா போன உன்ன காணாம நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா.. சரி அத விடு நான் உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன் மா..” என்றார் நதியின் அப்பா..

“என்னப்பா சொல்றீங்க” என்று அதிர்ச்சியானாள் நதி..

“ஆமாம் மா.. உள்ள போய் பாரு..” என்றார்..

தயக்கத்தோடு உள்ளே சென்ற நதிக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.. அவள் பார்த்தது வேறு யாரும் அல்ல அவள் பாதாள உலகத்தில் பார்த்து காதல் கொண்டு அவளுக்காக உயிர் கொடுத்த அவன் தான்..

ஓடிப்போய் இறுக கட்டியணைத்துக் கொண்டாள் அவனை..

“இப்பவாச்சும் சொல்லு உன் பேர் என்ன?” என்றாள் நதி..💖

முற்றும்…💖

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s