
ஒரு முறை தான் நீ என்ன பாத்த.. உள்ளுக்குள்ள உருக்குலைஞ்சு தான் போயிட்டேன்.. மனசெல்லாம் பட படனு வருது.. கொஞ்சம் அங்கங்க பட்டாம்பூச்சியும் பறக்குது..
கடைக்கண்ணுல மை வரைஞ்சு வந்தவளே, அந்த கண்ணால என்ன கொலை செஞ்சு போகுறயே..
உன் பாதம் பட்ட மண்ணை தொட்டு பார்க்க ஆசையடி.. விட்டுப்போன ஆசைகள உன்னிடம் கொட்டி தீர்க்க தோணுதடி..
நீ எட்டு வச்சு போகையில என் ஒத்த உசுரு நோகுதடி.. உன்ன பார்க்க பார்க்க மனம் பித்துப் பிடிச்சு போகுதடி.. கிறுகிறுன்னு வருகுதடி.. கிறுக்கு புடிச்சி போயிட்டேன்டி.. நீ கிட்ட வந்து பேசையில கொஞ்ச நேரம் செத்து தான் போனேனடி..
மூச்சுமுட்டி நின்னுகிட்டேன்.. முணுமுணுக்கவும் மறந்து புட்டேன்.. முகத்துல கண்ணிரண்டும் தன்ன மறக்க உன்ன கண்டுகிட்டேன்..
என் ஒத்தநாடி இருக்கும் வரை உன் கை பிடிச்சிருக்க வேணுமடி.. என் மொத்த நாடி அடங்கும் போதும் உன் மடி சாஞ்சு சாகனுமடி..