மகிழினியின் மனது-1


மணி காலைல அஞ்சரை ஆச்சு.. இன்னுமா தூக்கம்.. என்ன புள்ளையோ.. எந்திரிச்சு வெட்டு வெடுக்குனு வேலைய பாக்கலாம்னு இல்ல.. பொட்ட புள்ளைக்கு என்ன ஒரு தூக்கம்.. எப்போ தான் இதெல்லாம் உருப்பட போகுதோ..

என்று இடை விடாத பேச்சுக்களோடு தொடர்ந்து கொண்டே இருந்தார் மகிழினி யின் அப்பா..

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவள் படாரென எழுந்து உட்கார்ந்தாள். தலையில் அடித்துக்கொண்டு

“எல்லா என்னோட தலை எழுத்து” என்று புலம்பிகொண்டே எழுந்தாள்.

தெருக் குழாயில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பல் துலக்கி விட்டு குடத்தை எடுத்துக் கொண்டு தண்ணீர் பிடிக்க சென்றாள் மகிழினி..

அவளுடைய அம்மா எழுந்து சமையல் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.. ஆறரை மணிக்கு எல்லாம் அவளின் அம்மா காட்டு வேலைக்கு கிளம்ப வேண்டும்..

மகிழினி தண்ணீர் பிடித்து வீட்டில் உள்ள எல்லாவற்றிலும் தண்ணீரை நிரப்பி வைத்தாள்.. அப்படியே தொடர்ந்து வீட்டு வேலைகளையும் ஒவ்வொன்றாக முடித்தாள்..

மணி 7 ஆனது.. அவளின் பள்ளி வெகு தூரத்தில் இருக்கிறது. ஏழு முப்பதுக்கு எல்லாம் அவள் வீட்டிலிருந்து கிளம்பி ஆக வேண்டும். அப்பொழுதுதான் அவள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியும்.

அரக்கப்பரக்க கிளம்பிக் கொண்டிருந்தால் மகிழினி. அவள் தயாராவதற்குள் அவளின் தோழி விஜி அவள் வீட்டிற்கு வந்தாள்.

“என்ன மகிழினி இன்னும் நீ ரெடி ஆகலையா.. ஏற்கனவே டைம் ஆயிடுச்சு. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்.. இன்னைக்கு மேத்ஸ் டெஸ்ட் வேற இருக்கு. நான் இன்னும் பிரிப்பேர் பண்ணவே இல்ல. நீ பண்ணிட்டியா.?” என்று விஜி வந்ததும் நிறுத்தாமல் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தாள்..

“இருடி நான் ரெடி ஆயிட்டேன் இப்ப கிளம்பி விடலாம்.. நான் ஒரு அளவுக்கு ப்ரிப்பேர் பண்ணிருக்கேன். அங்க போய் பார்த்துக்கலாம். ” என்று சொல்லிக்கொண்டே வேகவேகமாக தயாரானால் மகிழினி..

மகிழினி பன்னிரண்டாவது படிக்கும் ஒரு அரசு பள்ளி மாணவி.. அவள் நன்றாக படிப்பாள்.. ஆனால் அவளுக்கு படிப்பதற்கு நேரம் இருக்காது. ஏனென்றால் அவளுக்கு பள்ளிநாட்களில் வீட்டு வேலையும், விடுமுறை நாட்களில் காட்டு வேலையும் சரியாக இருக்கும்.. அப்படி அந்த வேலைகளை செய்யாவிட்டால் அவளின் அப்பா அவளை அடித்து தோலை உரித்து விடுவார்..

மகிழினிக்கு இயற்கை என்றால் ரொம்ப பிடிக்கும்.. அவள் இயற்கையோடு பேசுவாள் மரம் செடி கொடி பூக்கள் இதன்மீது எல்லாம் அவளுக்கு அலாதி ஆசை அளவு கடந்த அன்பு எல்லாம் இருக்கும்.. யாருக்கும் எந்த தீங்கும் மனதளவில் கூட நினைக்க மாட்டாள். அவளுக்கு கெடுதல் செய்யும் நபருக்கு கூட நன்மையை நினைப்பாள்.. அவ்வளவு நல்ல குணம் உடைய மகிழினி வாழ்வில் படாத கஷ்டமே இல்லை..

அவள் படும் அத்தனை கஷ்டமும் அந்த கடவுளுக்கு மட்டுமே தெரியும். ஏனென்றால் அவளின் ஒவ்வொரு கண்ணீரும் அந்த கடவுளின் காலடிக்கே சொந்தம்..

இருந்தாலும் எல்லோரிடமும் அன்பாகவும் சிரித்த முகத்துடனும் பாசமாக பழகுவாள்.. அதற்காகவே மகிழினியை பள்ளியில் எல்லா ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்..

பன்னிரண்டாவது என்பதால் அவள் ஒவ்வொரு பாடத்தையும் பார்த்து பார்த்து தயார் செய்து கொண்டிருந்தாள்.

மகிழினி தயாரானதும் விஜியுடன் பள்ளிக்கு புறப்பட்டாள்.. இருவரும் நீண்ட தூரம் நடந்து கொண்டே இருந்தார்கள்.. அவர்களின் பள்ளி ஒரு காட்டினை தாண்டி சிறு நகரம் ஒன்றை தாண்டி உள்ளது..

அன்று பள்ளிக்கு சிறிது தாமதம் ஆனதால் இருவரும் வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். காட்டினை தாண்டி அந்த சிறு நகரத்திற்குள் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து மகிழினி யின் மீது படாரென்று மோதியது..

“அம்மா ஆ ஆ ஆ…..” என்று அலறிய மகிழினி
தூக்கி எறியப்பட்டாள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s