மகிழினியின் மனது-3


கொஞ்சம் கொஞ்சமாய் உயிரை இழந்து கொண்டிருந்த மகிழினியை தூக்கிக்கொண்டு ஒரு பெரிய மருத்துவமனைக்கு விரைந்தார்கள்..

அது ஒரு பெரிய அரசு மருத்துவமனை.. மகிழினியின் தந்தை கூலி வேலை பார்ப்பதால் அவரிடம் பெரிய அளவில் எந்த ஒரு சொத்தும் பணபலமும் கிடையாது..

அதனால் மகிழினி அரசு மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டாள்..

“ஐயோ கடவுளே என்னோட பொண்ணு எப்படியாவது காப்பாத்து.. ” என்று மனதுக்குள் மகிழினியின் அம்மா கடவுளிடம் மனமுருக வேண்டிக்கொண்டே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்…

மகிழினி தீவிர அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டுவந்து அனுமதிக்கப்பட்டாள்.. அவளை உள்ளே அழைத்துச் சென்ற உடன் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்த காவலர் “எல்லாரும் வெளியே இருங்கப்பா.. எல்லாரும் உள்ள வர கூடாது.. இங்கே எல்லாம் கூட்டம் அதிகமா சேரக்கூடாது.. வெளியவே நில்லுங்க, எப்படி இருக்குன்னு பார்த்துட்டு அவங்களே உங்கள உள்ள கூப்பிடுவாங்க.. அந்த ஓரமா போய் நில்லுங்க” என்று மகிழினி இன் பெற்றோரையும் உடன் வந்தவர்களையும் விலகி நிற்கச் சொன்னார்..

முதல் அரை மணி நேரம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள் அனைவரும்.. பின்பு ஒரு மணி நேரம்.. இரண்டு மணி நேரம் முடிந்தவுடன் மகிழினி தாய் தந்தையை தவிர மற்றவர்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக அவரவர் வேலையை பார்க்க செல்ல ஆரம்பித்தார்கள்..

உள்ளே இருந்து மருத்துவர்கள் எந்த தகவலையும் சொல்லவில்லை.. மகிழினி இன் தாய் தந்தைக்கு உயிரே இல்லை.. அவர்கள் இருவரும் உள்ளே செல்ல முடியாமல் நுழைவாயில் இருக்கும் காவலரிடம்

“என்னாச்சுன்னு கேட்டு சொல்லுங்க என் பொண்ணு எப்படி இருக்குறா.. தயவுசெஞ்சு கேட்டு சொல்லுங்க.” என்று கெஞ்சி மன்றாடிக் கொண்டிருந்தார்கள்..

ஆனால் அந்த காவலரை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அவர்கள் இருவரையும் அடித்து துரத்த குறையாக “ஏம்மா சொன்ன அறிவே கிடையாதா உங்களுக்கு.. எத்தனை தடவை சொல்றது.. உள்ள வைத்தியம் பார்த்துட்டு இருக்காங்க.. டாக்டர் வெளிய வந்தாதான் எது எப்படி என்று சொல்லமுடியும்.. உங்க இஷ்டத்துக்கு உங்கள உள்ள விடவும் முடியாது, நான் உள்ள போய் ஒவ்வொருத்தரா பாத்துட்டு வரவும் முடியாது. இதுக்கு மேல இங்க வந்து நின்னுட்டு இருந்தீங்கன்னா அப்புறம் அடித்து துரத்த வேண்டியதா இருக்கும்.. என்ன புரியுதா” என்று கூறினார்..

உடைந்த மனதில் ஊசியை வைத்து குத்துவது போல் இருவரும் மறுகி கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்கள்..

தனியாக மகிழினி யின் தந்தையும் தாயும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி ஆறுதல் சொல்லிக் கொண்டார்கள்.. “என்னங்க நீங்க கவலைப்படாதீங்க.. நம்ம பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது.. ” என்று மகிழினியின் அம்மா கூற,

அதற்கு உடனே அப்பா “அது தெரியும்டி நம்ம பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது.. ஆனா அவ உள்ள வலியில் எத்தனை வேதனையை அனுபவித்து இருக்கான்னு நினைச்சா என்னால தாங்க முடியல.. இருந்தாலும் நம்ம பொண்ணு சீக்கிரமா குணமாகி வெளியே வந்துடுவா. ” என்றார்..

என்று அவர்கள் கூறிக்கொண்டிருக்க அவசர சிகிச்சை பிரிவில் இருந்து ஒரு வெள்ளைத் துணி மூடியபடி ஒரு பெண்ணின் சடலம் வெளியே கொண்டு வரப்பட்டது..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s