அம்மாவின் கண்ணீர்.🥀🥺


நான் பெத்த பிள்ள
என்ன பிடிக்கலனு
சொல்லுது..🥀

மொத்தமாக அத்து
போயி என் உசுரு
நிக்குது..🥀

கத்தி ஒன்னு வெச்சு
வெட்டித் தான் காட்டனுமா?
என் நெஞ்சு கூட்டுக்குள்ள
நீ இருக்கும் இடம் எங்கன்னு..🥀

உன் முகம் பார்க்கும்
முன்னரே
என் அடி வயித்த அறுத்தேனே,
அழகு மணி உனை பார்க்க..🥀

ஆருயிரும் பறி தவிக்க
அன்பு மக உனை
ஈந்தேனே.. 🥀

என் இச்சைகளை
துரத்தி விட்டு
நா மீந்த சோறு
தின்னேனே..🥀

உனக்கு பால் சோறு
பிடிக்குமுண்ணு,
நா பழைய சோறு
உண்டனே..🥀

இப்போ ஒரு வேளை
சோத்துக்கு,
நா ஒவ்வொரு வாசப்படி
ஏறுகிறேனே..🥀

நா ஊட்டுன பால் உனக்கு,
ஒரு வேளையும்
செமிக்கலயா..🥀

சொத்து பத்து இல்லாம,
சொந்தங்களும் பார்க்காம,
ஒண்டியாக நின்னு
உன்ன ஆளாக்கி பார்த்தேனே..🥀

இப்போ அடிக்கும் மழைக்கும்
கொளுத்தும் வெயிலுக்கும்
ஒண்ட இடம் இல்லாம,
மண்டி போட்டு கெடக்கிறனே.🥀

மத்தியான சோத்துக்கு
உன் மனைவி
விருந்து கொண்டு வருவா..
தாரமே தர்மமுண்ணு
தல நீவி தருவா..🥀

உன்ன பெத்த வயிரு
பட்டினி டா மகனே..
இருந்தும் உன்ன மனம்
பறைய மறுக்குதடா மகனே..🥀

எனை படைத்த சிவனே,
என்னோட இந்த நிலைமை
நாளை என் மகனுக்கு
வேண்டாம்..🥀

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s