அம்மாவின் கண்ணீர்.🥀🥺


நான் பெத்த பிள்ளஎன்ன பிடிக்கலனு சொல்லுது..🥀 மொத்தமாக அத்துபோயி என் உசுருநிக்குது..🥀 கத்தி ஒன்னு வெச்சுவெட்டித் தான் காட்டனுமா?என் நெஞ்சு கூட்டுக்குள்ளநீ இருக்கும் இடம் எங்கன்னு..🥀 உன் முகம் பார்க்கும்முன்னரேஎன் அடி வயித்த அறுத்தேனே,அழகு மணி உனை பார்க்க..🥀 ஆருயிரும் பறி தவிக்கஅன்பு மக உனைஈந்தேனே.. 🥀 என் இச்சைகளைதுரத்தி விட்டுநா மீந்த சோறுதின்னேனே..🥀 உனக்கு பால் சோறுபிடிக்குமுண்ணு,நா பழைய சோறுஉண்டனே..🥀 இப்போ ஒரு வேளைசோத்துக்கு,நா ஒவ்வொரு வாசப்படிஏறுகிறேனே..🥀 நா ஊட்டுன பால் உனக்கு,ஒரு வேளையும்செமிக்கலயா..🥀 சொத்து…

அம்மா உனக்காக-1


உன்னை ஈன்ற வலியை விட பெரிது உன் வலியின் கண்ணீரை காண்பது.. இப்படிக்கு உன் அம்மா… தமிழ் இளவரசி..

கண்ணீர் கவிதைகள்-8


ஒத்த சொல்லு சொன்னாயே அம்மா..என் மொத்த உசுரும் புன்னா போச்சுதம்மா..கல்லு போல நின்னேனே..நீ கட்டையில போகும் போது.. மொத்த பூமி என் முன்னேசுத்தாம தான் நிக்குதம்மா..கண்ணு பட்டு போகுமுன்னுஉன் கண்ணுக்குள்ள என்ன வச்சாயே.. உன் கண் விழியும் கருத்துடுச்சே..என் கண்ணீரும் முறுகிடுச்சே..முத்து முத்தா நீ சிரிச்ச சிரிப்பெல்லாம்கொத்து கொத்தா எரியுதம்மா..

அம்மா என்னை விட்டு ஏன் சென்றாய்


உயிர் கொடுத்தாய் அம்மா.. உன் கருவில் எனை சுமக்காத போதும் – எனக்கு உயிர் கொடுத்தாய் அம்மா.. எனக்கு யாரும் இல்லை என்ற போது, நான் இருக்கிறேன் என்றாய்.. என் பாரம் சுமக்க தோள் கொடுத்து நின்றாய்.. என் துயர் பகிர்ந்த உந்தன், மரண வலி பகிர இயலாதவள் ஆனேன். எனக்காக அழுத உன் கண்கள், எனை பார்த்த படி விழித்திருக்க… என்னை மூச்சிற்கு முன்னூறு முறை அழைக்கும், உன் இதழ்கள் புன்னகைத்திருக்க… நான் அம்மா அம்மா…

ஆயுள் வரை வேண்டும் அம்மாவின் அன்பு


ஆயுள் வரை வேண்டும் என் அம்மாவின் அன்பு.. அம்மா கை விரல் பிடித்த கனம், அழுகை மறந்த காலம். அவளின் அரை விரலை என் துளி கையால் ஒளித்து வைத்ததிலொரு ஆனந்தம். கற்களும் முற்களும் கூட, சொர்க்க வாசலாய் தோன்றும் அவள் விரல் பிடித்த நேரம்.

ஆகாயக் கழுகுகள்


அம்மா கை விரல் பிடித்த கனம் கணம் அழுகை மறந்த காலம். அவளின் அரை விரலை என் துளி கையால் ஒளித்து வைத்ததிலொரு ஆனந்தம். கற்களும் முற்களும் கூட, சொர்க்க வாசலாய் தோன்றும் அவள் விரல் பிடித்த நேரம். அவள் கட்டிய முந்தானை கந்தலாயினும் கூட, அதில் கண்ட வாசனை சுகத்தை இன்னும் பெற இயலவில்லை பிறர் எவரிடமும். வெட்டிய மூங்கிலில் பற்றிய தீ போல அவள் விழிகள்.

வறண்ட நிலத்தில் ஒரு வாசகம்


தெருவெல்லாம் பிளந்திருக்க தீ பற்றியது என் தேகமெல்லாம். ஒரு சொட்டு நீர் தேடி ஓடியது கால்களெல்லாம். எரிகிறது தேகம், உறிகிறது உள்ளம். ஓடுகிறேன் ஒரு பொட்டு ஈரம் தேடி ஓடுகிறேன். எல்லை தென்படா தருணம் இது. எவ்விடம் செல்வேன் என்று தெரியாது, அடி எடுத்து வைக்கிறேன்,

நடவுப் பாட்டு(கிராமிய பாட்டு)


ஊர்ப்பக்கம் ஓங்கிய குரலில் ஒய்யாரமாய் பாடுவார்கள் நடவுப்பாட்டு. ஆறு வயதில் அம்மாவோடு வயலுக்கு போகும் போது என்னை பொலியில் (வரப்பு) உட்கார வைத்து விட்டு நடவு போடும் போது அவர்கள் பாடியதில் எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன் தோழமைகளே.. நடவு வேல நடக்குதுங்க நாளும் நல்லா இருக்குதுங்க.. பொடி நடையும் ஆகாதுங்க பொழுது கடத்த வேணாமுங்க..

மண் மகளின் மனம்


மனம் உடைந்து கிடக்கிறேன். உங்கள் திருக்கரம் என்னை தழுவிட மறுப்பதால்.. வாழ முடியாதோர்க்கும் வாழ்வு கொடுத்தேன். உங்கள் அரை சாண் வயிறு கழுவ-என் உயிர் ஆவியையும் சேர்த்து கொடுத்தேன். உங்களுக்காக நான் பட்ட பாடு, பொட்டல் நிலத்தில் பூத்த கள்ளியாய்

அன்பான அம்மாவுக்கு


உதிரங்கள் சொட்டச் சொட்ட உயிர் கொடுத்த தாயே, உன் உதிர்கின்ற கூந்தல் இழை சுமக்க வரம் தருவாயே. துணிச்சல் இல்லை அம்மா, உன்னை போல் வளைந்திட. காடு கரை அலைந்தாய், கல் சுமந்து காப்பாற்றினாய்,