மகிழினியின் மனது-4


அவசர சிகிச்சை பிரிவில் இருந்து ஒரு வெள்ளைத் துணி மூடியபடி ஒரு பெண்ணின் சடலம் வெளியே கொண்டு வரப்பட்டது.. கொஞ்சம் கொஞ்சமாய் சுவாசித்துக் கொண்டு இருந்த மகிழினி யின் பெற்றோர் அந்த சடலம் கொண்டுவரப்பட்டது பார்த்தவுடன் சுத்தமாக ஒரு நிமிடம் மூச்சு நிறுத்திவிட்டனர்.. உயிர் பிரிந்த உடல் போல் உறைந்து போய் நின்றார்கள்.. அவர்கள் முன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது அந்த சடலம்.. இந்த சடலத்தை வண்டியில் தள்ளிக் கொண்டு வந்த அந்த நபர்,

மகிழினியின் மனது-3


கொஞ்சம் கொஞ்சமாய் உயிரை இழந்து கொண்டிருந்த மகிழினியை தூக்கிக்கொண்டு ஒரு பெரிய மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.. அது ஒரு பெரிய அரசு மருத்துவமனை.. மகிழினியின் தந்தை கூலி வேலை பார்ப்பதால் அவரிடம் பெரிய அளவில் எந்த ஒரு சொத்தும் பணபலமும் கிடையாது.. அதனால் மகிழினி அரசு மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டாள்.. “ஐயோ கடவுளே என்னோட பொண்ணு எப்படியாவது காப்பாத்து.. ” என்று மனதுக்குள் மகிழினியின் அம்மா கடவுளிடம் மனமுருக வேண்டிக்கொண்டே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்…

மகிழினியின் மனது-2


அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து மகிழினி யின் மீது படாரென்று மோதியது.. “அம்மா ஆ ஆ ஆ…..” என்று அலறிய மகிழினிதூக்கி எறியப்பட்டாள்.. அந்த ஒரு நொடி அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளை சுற்றி ஒரு முப்பது நாற்பது பேர் இருந்திருப்பார்கள். ஆனால் ஒருவர்கூட அவளை தூக்க வரவில்லை. அவளால் நகர முடியவில்லை. அவள் கால்கள் இரண்டும் பலத்த காயமுற்று இருந்தது.. அவளின் புத்தகப்பை வெகு தூரத்தில் பறந்து போய் விழுந்தது.. உடனிருந்த மகிழினி…

மகிழினியின் மனது-1


மணி காலைல அஞ்சரை ஆச்சு.. இன்னுமா தூக்கம்.. என்ன புள்ளையோ.. எந்திரிச்சு வெட்டு வெடுக்குனு வேலைய பாக்கலாம்னு இல்ல.. பொட்ட புள்ளைக்கு என்ன ஒரு தூக்கம்.. எப்போ தான் இதெல்லாம் உருப்பட போகுதோ.. என்று இடை விடாத பேச்சுக்களோடு தொடர்ந்து கொண்டே இருந்தார் மகிழினி யின் அப்பா.. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவள் படாரென எழுந்து உட்கார்ந்தாள். தலையில் அடித்துக்கொண்டு “எல்லா என்னோட தலை எழுத்து” என்று புலம்பிகொண்டே எழுந்தாள்.

அவள் தான் நதி-9


“அந்த அறையில் உன்னை இறுக கட்டிப் பிடித்துக் கொண்டது வேறுயாருமல்ல உன் அம்மா”..… பேரதிர்ச்சியில் உறைந்து போனாள் நதி…… அவளின் அதிர்ச்சி தெளிய சில நிமிடங்கள் தேவைப்பட்டது.. மயான அமைதி.. திடீரென்று நதி பித்துப் பிடித்தவள் போல் ஓட ஆரம்பித்தாள் அந்த புகை மூட்டம் நிறைந்த அறைக்கு.. அவனும் பின் தொடர்ந்தான்..

அவள் தான் நதி-8


அந்த அறை இரண்டு மாடிகளுக்கு மேல் இருந்தது.. மெல்ல நடந்து மேலே அந்த அறைக்கு அழைத்துச் சென்றான் அவன்.. பதட்டமும் பயமும் நிறைந்தவளாய் அவனுடன் அந்த அறைக்கு சென்றாள் நதி.. அந்த அறையின் கதவை திறந்தவுடன் கண்களுக்கு எதுவுமே தென்படாத அளவுக்கு புகை மூட்டமாக இருந்தது.. என்ன என்று யோசிப்பதற்கு முன் அவளை ஏதோ ஒன்று வேகமாக வந்து இறுக கட்டிப் பிடித்துக் கொண்டது. “ஆஆஆஆஆஆஆஆஆஆ” யாரது……..

அவள் தான் நதி -7


“நான் சொன்னது அதுக்குள்ள மறந்துட்டியா நதி.. இது தண்ணீரே கிடையாது நம்பிக்கையோடு என்னோடு வா… என்னுடைய இடத்துக்கு நான் உன்ன கூட்டிட்டு போறேன்… அதுதான் உனக்கு பாதுகாப்பு.. தயவு செஞ்சு என்னை நம்பு நதி.. நான் உனக்கு நல்லது தான் நினைக்கிறேன்..” அவன் கண்களில் ஏதோ ஒரு உண்மையை பார்த்தவளாய் அவனோடு அந்த மாய நீருக்குள் இறங்கினாள் நதி… அவர்கள் நீருக்குள் இறங்க இறங்க அவள் உருவம் மறைவது போல் உணர்ந்தாள்.. இருவரும் முழுவதுமாய் அந்த மாய…

அவள் தான் நதி-6


“அதுதான் ஏன்னு கேக்குறேன்..” என்று கோபமாக கேட்டாள் நதி.. “சொல்றேன் சொல்றேன்.. ஏன்னா இந்த சாத்தான்களோட உணவே அந்த ஆத்மாக்கள் தான்..” திகைத்துப் போனாள் நதி… ஒன்றுமே புரியாதவளாய், மனதில் குழப்பம் நிறைந்தவளாய், மிகுந்த பயத்தோடு அங்கும் இங்கும் கண்களை அலைய விட்டு கொண்டிருந்தாள்.. “ஆமா, இப்படிப்பட்ட எடத்துல நீ மட்டும் எப்படி தனியா தைரியமா இருக்க. உன்கூட மனுஷங்க யாருமே இல்லையா? இல்லை நீயே மனுஷன் இல்லையா?.. என்று அச்சத்தோடு கேட்டால் நதி..

அவள் தான் நதி -5


குகைக்கு வெளியே வந்தார்கள்.. ஆஆஆஆ என்று அலரினாள் நதி.. அந்த குகைக்கு வெளியே வந்த வெளிச்சத்தை பார்த்து நம் உலகத்திற்கு வந்து விட்டோம் என்று நினைத்த நதிக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.. அவள் அவள் பார்த்தது மனித உலகத்தை அல்ல.. சாத்தான்களின் சாம்ராஜ்யம்..

அவள் தான் நதி 4


நதியின் கேள்விகள் அவன் செவிகளை தொடாதவனாய், அவள் விழிகளில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான் அவன்..… “உன்ன தான் கேட்கிறேன். காது கேட்காதா?” என்று சத்தமாக கத்தினாள்… அவள் கத்தியதை கண்டுகொள்ளாதவனாய் “நீ என்ன இவ்வளவு அழகா இருக்க” என்று கேட்டான்.. நதியின் மனதில் சலனம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாதவளாய் “நீ என்ன லூசா” என்று கேட்டாள்.. “ஆமா..” “முதலில் நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”. “ம்ம்ம் சரி சொல்றேன்.. நான் ரொம்ப சின்ன வயசா இருக்கும்போது என்னை…

அவள் தான் நதி -3


யாரோ அவள் கால்களின் அடியில் இருந்து மண்ணுக்குள் இழுப்பது போல் தோன்றியது.. படாரென்று நிலத்தின் அடியில் இழுத்துக் கொண்டே போனது.. முடிவில்லாமல் போய்க் கொண்டே இருந்தது.. அந்த நிமிடம் ஒரு உருவம் அவள் கையை பிடித்துக் கொண்டது.. “யாரது யாரது…” என்று இடைவிடாமல் அலறினாள் நதி. அலறி ஓய்ந்து அமைதியானாள்.. அந்த கரு கும்மிருட்டில் என்ன நடக்கிறது என்றே நதிக்கு புரியவில்லை.. என்ன என்று யூகிப்பதற்குள் அவள் கைகளை பிடித்திருந்த ஒன்று அவள் கைகளை விட்டு விட்டது…..

அவள் தான் நதி – 2


அவள் சத்தம் வெளி வரும் முன்பே நதி அங்கிருந்து தூக்கி எறியப்பட்டாள். அந்த கருப்பு உருவம் அவள் காலை பிடித்து இழுத்துக்கொண்டே ஒரு காட்டிற்குள் சென்று மறைந்தது. அதிர்ச்சியில் மயங்கிய நதி எழுந்து பார்த்தால் அது ஒரு சூனிய காரனின் சுடுகாடு. அதிர்ந்து போனாள் நதி. அந்த இடம் ஒரு அடர்ந்த காடு. ஓநாய்கள் ஓலமிட்டு கொண்டிருந்தன. ஆந்தைகளின் அலறல் சத்தம் அவள் காதுகளை அடைக்க செய்தன. அரை நிலவொளியில் அந்தக் காடு மங்கலாக தெரிந்தது. ஆயிரம்…

அவள் தான் நதி – 1


ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தாள் நதி. ஒரே குழப்பமாக இருந்தாள். “யாராக இருக்கும் அது. நேற்று இரவு கருப்பாக ஒரு உருவம் தூரத்தில் கடந்து போனதே.” “அம்மா நதி…” தன் தந்தை குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் நதி. “என்னம்மா ரொம்ப நேரமா என்னமோ யோசிச்சுட்டே இருக்க. என்னாச்சு மா. அம்மா ஞாபகாமாவே இருக்கா டா. அவ போனாலும் நம்ம கூடவே தா இருப்பா.” அப்பாவோடு தனியே தங்கி இருக்கும் நதியின் அம்மா பத்து நாட்களுக்கு முன்பு இறந்து…