என் உயிர் தோழமையே…👭


நண்பா..என் பாரத்தை உன் தோளில் இறக்கி வைத்தேன்..இருந்தாலும் நீ எனை பாரம் என்று நினைக்கவில்லை… தோழி…என் வலிகளை உன்னிடம் கூறினேன்..என் காயங்களுக்கு மருந்தாக மாறினாய்.. நண்பா..என்னை சோக முகத்தில் நீ பார்த்தால்,சிரிக்க வைக்கும் கோமாளியாய் தோன்றி நின்றாய்… தோழா..உயிருக்கு மேலாக நினைக்கும் என் காதல் என்னை விட்டு சென்றாலும்,அதுகூட சருகு தானடா நான் இருக்கிறேன் உனக்காக.. என்றாய்… நண்பியே..உன் கனவுகள் கனவாக மட்டுமே இருக்கும் என்று என் சுற்றங்கள் சொல்லும்போது,அதை நிஜமாக மாற்ற நித்தம் நீ போராடினாய்……

தோழியே…..


தோழியே உன் தோளிலே துளிநேரம் சாயலாமோ.. உன் கண்களில் என் பாரங்கள் அதை நீயும் தாங்கலாமோ..