உயரப் பறந்தாலும் உலகம் தூற்றும்…🥺நீ ஒடுங்கி நடந்தாலும்உலகம் தூற்றும்…😯உன்னை நீ செதுக்கு..🤔உனக்கு உளியாய் நீயே இரு…🧐உன் வாழ்வைஉனக்காய் வாழ்ந்திடு்…😎
Category: ஹைக்கூ கவிதைகள்
கண்ணீர் கவிதைகள் – 12
உயிர் உறைந்து போகிறேன்..நீ சொன்ன வார்த்தைகேட்டு..கணம் கணமும் இறந்து போகிறேன்..காதல் எனும் கவலையில்வீற்று..🥀🥺 தமிழ் இளவரசி..
கண்ணீர் கவிதைகள்-11
உயிரை நோகடிக்கும் வார்த்தைகள்தான் காதலைகாயப்படுத்தும் என்பதில்லை..நீ பார்க்கும் ஒரு ஏளன அலட்சிய பார்வை அதைவிட என் மனதை சுக்கு நூறாக உடைக்கிறதே..! தமிழ் இளவரசி…
வெற்றியின் வார்த்தைகள் -7
துயரங்கள் தீரும் பொதுமனிதனின் உயரம் குறைந்து போகும்..துன்பத்தை பெற்றால் தானேஇன்பத்தை தேடும் எண்ணம்வரும்..நீ உயரம் தொட,துயரம் எனும் ஏணியை பயன்படுத்து…சிகரம் ஆயினும் சிதறிப் போகும்,உன் எண்ணம் அதை நீ பண் படுத்து…! தமிழ் இளவரசி
எனதவன் – 25
நீ என் மடி சாயும் நேரம் என் மனம் எங்கும் வீசும் காதல் வாசம்… உன் காதல் ஒன்றே போதும், என் காலம் முடிந்தாலும்… தமிழ் இளவரசி..
அம்மா உனக்காக-1
உன்னை ஈன்ற வலியை விட பெரிது உன் வலியின் கண்ணீரை காண்பது.. இப்படிக்கு உன் அம்மா… தமிழ் இளவரசி..
வெற்றியின் வார்த்தைகள் -6
தடைகளைத் தாண்டும் தன்னம்பிக்கை உன்னிடம் இருந்தால், உடைந்த பூமியையும் ஒன்றாக்க முடியும்… தமிழ் இளவரசி
எனதவன்-24
நான் இன்னும் எத்தனை நாட்கள் உயிர் வாழ்வேன் என்று தெரியாது.. ஆனால் நீ என்னை பிரியும் தருணம் வருமாயின் அன்றே பிரியும் உன் மடி சாய்ந்து… ❤️தமிழ் இளவரசி..
கண்ணீர் கவிதைகள்-10
என் இதயம் முற்றிலுமாய் வெற்றிடமற்று கனத்து கிடக்கிறது.. யாருமில்லா கானகத்தில் துணையென்று ஏதுமின்றி, தனிமையிலே தவிக்கின்றேன்.. தன்னிலை உணர மறுக்கின்றேன்.. தமிழ் இளவரசி..
எனதவன்-23
சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நீ இல்லாத நேரம் எனக்கு அது நரகம்.. தமிழ் இளவரசி
எனதவன்-22
நிலவு வரும் நேரத்தில் களவு போனது என் நெஞ்சம் உன் கண்களில்… 💖தமிழ் இளவரசி…
வெற்றியின் வார்த்தைகள்-5
சிலரின் நிலை உயரும் போது நிழல் நிஜம் ஆகிறது, நிஜம் நிலை தெரியாமல் போகிறது.. தமிழ் இளவரசி…
கண்ணீர் கவிதைகள்-9
எல்லோர் வாழ்க்கையிலும் அதிகமாக நேசித்த ஒன்று நிரந்தரமாக தொலைந்து போன கதை இருக்கும்.. தமிழ் இளவரசி..
வெற்றியின் வார்த்தைகள்-4
புரியாத சில இடங்களில் புரிய வைக்க முயல்வதை விட மௌனமாய் இருப்பது நல்லது… தமிழ் இளவரசி…
எனதவன்-21
மழையின் தூரலில் உன் இதழ் மழையின் சாரலில், இதமாய் நனைய வேண்டும். என் இமைகளும் உன்னை இறுக அணைத்திட வேண்டும்..💘 💕தமிழ் இளவரசி…
கண்ணீர் கவிதைகள்-7
கொலை அறுந்து போகிறது.என் உயிர் ஆவி வேகிறது.எதற்காக இந்த பிறவி,எதற்காக இத்தனை வலி..சாவும் சற்று யோசிக்கிறதே,என்னை அணைக்க மறுக்கிறதே..🥺 தமிழ் இளவரசி..
எனதவன்-20
உயிரில் கலந்த உன்னைஎன் மனதில் நிறைந்த உன்னைகரை இல்லா கடல் கொண்ட ஆழம் போல்என் இதயத்தின் ஆழத்தில்மூழ்க கண்டேன்..💙🥰 தமிழ் இளவரசி…❤️
எனதவன்-19
உனை நான் நித்தமும் தான் நினைந்து,சித்தமும் உறைந்து போனேனடா..என் வாழ்வில் நான் இழந்த அனைத்தும் உன் உருவில்மொத்தமாய் அடைந்தேனடா..💕💕💕💕💕😘 💖தமிழ் இளவரசி..
கண்ணீர் கவிதைகள்-6
பெற்ற தகப்பனாகவே இருந்தாலும்உற்றது இல்லை எனில்ஊனம் போன்றதே வாழ்க்கை..😢 வாழ்கையில் நான் தொலைத்த நிம்மதி.என் அருகில் வர பிடிக்காத சந்தோஷம்.சுற்றி ஆயிரம் ஆட்கள் இருந்தாலும்,அனாதையாய் நின்ற நிமிடங்கள்..😢 புரிய முடியாத சூழ்நிலை,புரிந்து கொள்ளாத என் நிலை..😢 இதயம் கனத்து தரையில் இறங்கி விடும் போல இருக்கும் அந்த நொடிகள்..😢 தமிழ் இளவரசி…
கண்ணீர் கவிதைகள்-5
இருக்கும்போது யாருடைய அன்பும் நமக்குப் புரிவதில்லை… இழந்த பின்பு வருந்துவதால் இழந்தவர்கள் மீண்டும் வருவதில்லை…💔🥺 தமிழ் இளவரசி…