எனதவன்-14


உதிர்ந்த ஒற்றை இலை சருகாய் வலிக்கிறது என் இதயம்.. மரத்தை பிரிந்த இலை போல உனை பிரிந்து கிடப்பதினால்..💖 தமிழ் இளவரசி 💖

எனதவன்-13


என் கண்ணில் சுரந்த கண்ணீரும் கரைந்து காற்றில் உறைகிறது உன்னால்.. உன்னை இழந்து விட்டேன் என்றாலும் உன்னில் விழுந்து விட்டேன் என்பதால் இன்றும் வாழ்கிறேன் உன் நினைவோடு..💖 தமிழ் இளவரசி 💖

எனதவன்-12


என் விரல்கள் உன்னிடம் தேட நினைப்பது என் பேனாவிற்க்கான கவிதை வரிகள் மட்டுமே..💖 தமிழ் இளவரசி 💖

எனதவன்-11


கொட்டும் மழையில் ஒற்றை குடைக்குள் இணைந்து நடக்கும் நேரம், இடை விடாது இசைக்கும் என் இதயம்.. என் சுவாசம் நீ தான் என்று..💖 💖 தமிழ் இளவரசி

எனதவன்-10


உன் ஒருவன் வருகைக்காக காத்திருக்கிறோம்.. நானும் ஒரு கோப்பை தேநீரும்..💖 தமிழ் இளவரசி..💖

எனதவன்-9


என் இறுதி வரை வேண்டும் இந்த இறுக்கம்… இடை நுழைய முடியாமல் காற்றும் சற்று பொறாமை படும் படி… தமிழ் இளவரசி…💕