மகிழினியின் மனது-4


அவசர சிகிச்சை பிரிவில் இருந்து ஒரு வெள்ளைத் துணி மூடியபடி ஒரு பெண்ணின் சடலம் வெளியே கொண்டு வரப்பட்டது.. கொஞ்சம் கொஞ்சமாய் சுவாசித்துக் கொண்டு இருந்த மகிழினி யின் பெற்றோர் அந்த சடலம் கொண்டுவரப்பட்டது பார்த்தவுடன் சுத்தமாக ஒரு நிமிடம் மூச்சு நிறுத்திவிட்டனர்.. உயிர் பிரிந்த உடல் போல் உறைந்து போய் நின்றார்கள்.. அவர்கள் முன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது அந்த சடலம்.. இந்த சடலத்தை வண்டியில் தள்ளிக் கொண்டு வந்த அந்த நபர்,

மகிழினியின் மனது-3


கொஞ்சம் கொஞ்சமாய் உயிரை இழந்து கொண்டிருந்த மகிழினியை தூக்கிக்கொண்டு ஒரு பெரிய மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.. அது ஒரு பெரிய அரசு மருத்துவமனை.. மகிழினியின் தந்தை கூலி வேலை பார்ப்பதால் அவரிடம் பெரிய அளவில் எந்த ஒரு சொத்தும் பணபலமும் கிடையாது.. அதனால் மகிழினி அரசு மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டாள்.. “ஐயோ கடவுளே என்னோட பொண்ணு எப்படியாவது காப்பாத்து.. ” என்று மனதுக்குள் மகிழினியின் அம்மா கடவுளிடம் மனமுருக வேண்டிக்கொண்டே கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்…

வெற்றியின் வார்த்தைகள் -7


துயரங்கள் தீரும் பொதுமனிதனின் உயரம் குறைந்து போகும்..துன்பத்தை பெற்றால் தானேஇன்பத்தை தேடும் எண்ணம்வரும்..நீ உயரம் தொட,துயரம் எனும் ஏணியை பயன்படுத்து…சிகரம் ஆயினும் சிதறிப் போகும்,உன் எண்ணம் அதை நீ பண் படுத்து…! தமிழ் இளவரசி

மகிழினியின் மனது-2


அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து மகிழினி யின் மீது படாரென்று மோதியது.. “அம்மா ஆ ஆ ஆ…..” என்று அலறிய மகிழினிதூக்கி எறியப்பட்டாள்.. அந்த ஒரு நொடி அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளை சுற்றி ஒரு முப்பது நாற்பது பேர் இருந்திருப்பார்கள். ஆனால் ஒருவர்கூட அவளை தூக்க வரவில்லை. அவளால் நகர முடியவில்லை. அவள் கால்கள் இரண்டும் பலத்த காயமுற்று இருந்தது.. அவளின் புத்தகப்பை வெகு தூரத்தில் பறந்து போய் விழுந்தது.. உடனிருந்த மகிழினி…

மகிழினியின் மனது-1


மணி காலைல அஞ்சரை ஆச்சு.. இன்னுமா தூக்கம்.. என்ன புள்ளையோ.. எந்திரிச்சு வெட்டு வெடுக்குனு வேலைய பாக்கலாம்னு இல்ல.. பொட்ட புள்ளைக்கு என்ன ஒரு தூக்கம்.. எப்போ தான் இதெல்லாம் உருப்பட போகுதோ.. என்று இடை விடாத பேச்சுக்களோடு தொடர்ந்து கொண்டே இருந்தார் மகிழினி யின் அப்பா.. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவள் படாரென எழுந்து உட்கார்ந்தாள். தலையில் அடித்துக்கொண்டு “எல்லா என்னோட தலை எழுத்து” என்று புலம்பிகொண்டே எழுந்தாள்.

வீரத் தமிழ் தேசம்


Originally posted on Tamizhin Nadhi!:
தமிழனின் வீரத்தை கிராமிய நடையில் உரைக்க முயன்றுள்ளேன் தோழமைகளே. உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அதோடு அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். சீறி வரும் தேகத்திலே ஏறி வருது வீரக்காள. பாய்ந்து வரும் வேகத்திலே அனல் பறக்கும் மனசுக்குள்ள. எட்டி நின்னு பார்க்கயிலே ஈரக்குளை இறந்து போகும். பறந்து வந்து அடக்கயிலே தமிழன் தேகமெல்லாம் தீப்பிடிக்கும். வீரம் விளைந்த பூமியிங்க. மானம் விதைச்ச சாமியிங்க. பூமி மாதா பாதம் தொட்டு விளையாடும்…

கண்ணீர் கவிதைகள்-9


எல்லோர் வாழ்க்கையிலும் அதிகமாக நேசித்த ஒன்று நிரந்தரமாக தொலைந்து போன கதை இருக்கும்.. தமிழ் இளவரசி..

கண்ணீர் கவிதைகள்-7


கொலை அறுந்து போகிறது.என் உயிர் ஆவி வேகிறது.எதற்காக இந்த பிறவி,எதற்காக இத்தனை வலி..சாவும் சற்று யோசிக்கிறதே,என்னை அணைக்க மறுக்கிறதே..🥺 தமிழ் இளவரசி..

எனதவன்-20


உயிரில் கலந்த உன்னைஎன் மனதில் நிறைந்த உன்னைகரை இல்லா கடல் கொண்ட ஆழம் போல்என் இதயத்தின் ஆழத்தில்மூழ்க கண்டேன்..💙🥰 தமிழ் இளவரசி…❤️

கண்ணீர் கவிதைகள்-3


நீ இருக்கும் போது உன்னை பற்றி புரிந்து கொள்ளாத இதயம், நீ இறந்த பிறகு புரிந்து கொள்ளும்.. உன் பிரிவின் வலி எவ்வளவு கொடியது என்று…💔💔 தமிழ் இளவரசி…

எனதவன் – 17


உனக்குள் சிறை பட்டு இருக்கும் என் இதயத்தை என்ன செய்ய போகிறாய்.. இழந்து விட்டேன் என்னை.. இருந்தாலும் கலந்து விட்டேன் உன்னில்..💖 தமிழ் இளவரசி..💖

அவள் தான் நதி இறுதி அத்தியாயம்


தாமதமான பதிவிற்கு மன்னியுங்கள் தோழமைகளே… நதியின் தாய் குரல் மறையும் முன்னே அடுத்த கணத்தில் உரைத்தாள் நதி.. “என் உடலையும் உயிரையும் தனியாக பிரிக்க தயார் பண்ணுங்க”… என்று உத்தரவிட்டாள் நதி… நதி சொன்ன அடுத்த கணத்தில் அவளின் கையைப் பிடித்து வேகமாக இழுத்துக்கொண்டு ஒரு இடத்திற்கு சென்றான் அவன்.. அவள் அம்மாவின் ஆத்மாவும் அவர்களை பின்தொடர்ந்தது.. அவன் அழைத்துச் சென்றது ஒரு புத்தகங்கள் நிறைந்த அறைக்கு.. அங்கு மிகுந்த பாதுகாப்போடு ஒரு செப்பேடு வைக்கப்பட்டிருந்தது.. அந்த…

எனதவன்-13


என் கண்ணில் சுரந்த கண்ணீரும் கரைந்து காற்றில் உறைகிறது உன்னால்.. உன்னை இழந்து விட்டேன் என்றாலும் உன்னில் விழுந்து விட்டேன் என்பதால் இன்றும் வாழ்கிறேன் உன் நினைவோடு..💖 தமிழ் இளவரசி 💖

தழ்ந்து நில்லாதே தன்னம்பிக்கை கொள்


இந்த உலகத்தில் மிகச்சிறந்த மனிதர் யார் தெரியுமா அது நீ தான் இந்த உலகத்தில் மிக மோசமான மனிதர் யார் தெரியுமா அதுவும் நீதான் நீ உன்னை எப்படி எண்ணுகிறாயோ அப்படியே நீ ஆகிறாய் உன் எண்ணமே உன் வாழ்வை தீர்மானிக்கிறது உன் மனதுக்குள் உன்னை நீ தாழ்த்தி என்னும் வரை மற்றவரும் உன்னை தாழ்வாகவே எண்ணுவார் போராடு இந்த உலகோடு இல்லை உன் மனதோடு உன் மனதிடம் நீ யார் என்று நிரூபித்தால் இந்த உலகம்…

என் அன்பே…


கடவுள் கொடுத்த சொந்தம் நீகன நேரம் பிரிய மாட்டேன் உன்னை..உன் கண் இமைகளில் பதிந்தே கிடப்பேன்ஆயுள் முடிந்தது என்று என்னை அழைக்கும் வரை..உறைந்து விட்டேன் உன் அன்பில்கரைந்து விட்டேன் உன் காதலில்..மண்ணோடு மண்ணாக மறைந்து போனாலும்,உன் கண்ணோடு என் காதலை கலந்தே வாழ்ந்திருப்பேன்.. என் அன்பே…

அவள் தான் நதி – 10


“இல்லம்மா எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். நான் எதுக்கு இங்க வந்தேன்?…” அதற்கு அவள் அம்மா சொன்ன பதில், “உன் உடலையும் உயிரையும் தனியாகப் பிரிப்பதற்கு…” நெஞ்சடைத்து நின்றாள் நதி.. “என்னம்மா சொல்ற… நான் அப்ப இறந்து போறதுக்கு தான் இங்க வந்தேனா.. “ “அவசரப்படாதே நதி… நான் உன்னோட அம்மா.. உன்ன கொல்லனும்னு நான் நினைப்பேனா…? இது ஒரு யுத்தம் மா.. ஆத்மாவுக்கும் சாத்தானுக்கும் இடையில் நடக்கிற ஒரு பெரிய யுத்தம்.. இதுல ஒவ்வொருமுறையும் சாத்தான்கள் ஆத்மாக்களை…

அவள் தான் நதி-6


“அதுதான் ஏன்னு கேக்குறேன்..” என்று கோபமாக கேட்டாள் நதி.. “சொல்றேன் சொல்றேன்.. ஏன்னா இந்த சாத்தான்களோட உணவே அந்த ஆத்மாக்கள் தான்..” திகைத்துப் போனாள் நதி… ஒன்றுமே புரியாதவளாய், மனதில் குழப்பம் நிறைந்தவளாய், மிகுந்த பயத்தோடு அங்கும் இங்கும் கண்களை அலைய விட்டு கொண்டிருந்தாள்.. “ஆமா, இப்படிப்பட்ட எடத்துல நீ மட்டும் எப்படி தனியா தைரியமா இருக்க. உன்கூட மனுஷங்க யாருமே இல்லையா? இல்லை நீயே மனுஷன் இல்லையா?.. என்று அச்சத்தோடு கேட்டால் நதி..

அவள் தான் நதி -5


குகைக்கு வெளியே வந்தார்கள்.. ஆஆஆஆ என்று அலரினாள் நதி.. அந்த குகைக்கு வெளியே வந்த வெளிச்சத்தை பார்த்து நம் உலகத்திற்கு வந்து விட்டோம் என்று நினைத்த நதிக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.. அவள் அவள் பார்த்தது மனித உலகத்தை அல்ல.. சாத்தான்களின் சாம்ராஜ்யம்..