பச்சை நிறப் பாவை


பச்சை நிற சேலை கட்டி படுத்திருக்கும் பாவை அவள். உச்சி மலை ஓரத்திலே குடியிருக்கும் குமரி அவள். தொட்டில் கட்டி சீராட்டி தாலாட்டும் தாய் நிலம். பூமியெங்கும் படர்ந்திருக்கும் பச்சை நிற வானம்.

மழை நேர மண் வாசம்


புகை சூழந்த நேரம், என் புவியெங்கும் ஈரம். மலை சூழ்ந்த மேகம், என் கனவெங்கும் தாகம். விண் மழை நீர் போல், என் கண்ணீரும் பொழிந்திடவே

கொட்டும் மழையிலே


கொட்டும் மழையிலே ஒற்றைக் கோலம் பூண்டாய். வெட்டும் மின்னலிலே விண்மீனாய் பிரகாசித்தாய். வட்ட நிற கண்ணாடிப் பொட்டாய்,

எனக்காக நீ வேண்டாம் உனக்காக நான் வாழ்கிறேன்


கன நேரம் கண்ணில் பாய்ந்த அம்பும், மன பாரம் நெஞ்சில் ஏந்த வெம்பும். கண்ணீரில் ஏற்றி வைத்த தீபம், நெஞ்சத்தை தீண்டி விட ஆறும். சுவரோரம் படிந்த பாசி நானோ. மழையாலே மலர்கின்ற மலரும் தானோ. மழலைகள் வந்தாடும் மடியில்,

மழைத் துளிகள்..!


மேக மகள் கண்ணீரோ இந்த மழைத் துளிகள்..! அவளின் கண் கொண்ட மை கலந்த காரணமோ, அவள் பெயர் கரு மேகம்..! தூரல் உருவில் தீண்டுகிறாய்..! இதயத்தை இதழால் வருடுகிறாய்..! வானத்தில் தொடங்கிய உன் அழுகை,