உனக்கு உளி நீயே..!


உயரப் பறந்தாலும் உலகம் தூற்றும்…🥺நீ ஒடுங்கி நடந்தாலும்உலகம் தூற்றும்…😯உன்னை நீ செதுக்கு..🤔உனக்கு உளியாய் நீயே இரு…🧐உன் வாழ்வைஉனக்காய் வாழ்ந்திடு்…😎

வெற்றியின் வார்த்தைகள் -7


துயரங்கள் தீரும் பொதுமனிதனின் உயரம் குறைந்து போகும்..துன்பத்தை பெற்றால் தானேஇன்பத்தை தேடும் எண்ணம்வரும்..நீ உயரம் தொட,துயரம் எனும் ஏணியை பயன்படுத்து…சிகரம் ஆயினும் சிதறிப் போகும்,உன் எண்ணம் அதை நீ பண் படுத்து…! தமிழ் இளவரசி

வெற்றியின் வார்த்தைகள் -6


தடைகளைத் தாண்டும் தன்னம்பிக்கை உன்னிடம் இருந்தால், உடைந்த பூமியையும் ஒன்றாக்க முடியும்… தமிழ் இளவரசி

வெற்றியின் வார்த்தைகள்-3


சொத்துபத்து ஏதுமில்லை.. சொந்த பந்தம் நாதி இல்லை.. நொந்து போய் அழுதாலும் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்ல ஆளில்ல.. கல்லு முள்ளு கிழிக்கத்தான் கஷ்டப்பட்டு, சொந்த காலில் நின்னேன் நான்.. எனக்கு இதுவே பெரிய சாதனை தான்..😎✋ தமிழ் இளவரசி…

தழ்ந்து நில்லாதே தன்னம்பிக்கை கொள்


இந்த உலகத்தில் மிகச்சிறந்த மனிதர் யார் தெரியுமா அது நீ தான் இந்த உலகத்தில் மிக மோசமான மனிதர் யார் தெரியுமா அதுவும் நீதான் நீ உன்னை எப்படி எண்ணுகிறாயோ அப்படியே நீ ஆகிறாய் உன் எண்ணமே உன் வாழ்வை தீர்மானிக்கிறது உன் மனதுக்குள் உன்னை நீ தாழ்த்தி என்னும் வரை மற்றவரும் உன்னை தாழ்வாகவே எண்ணுவார் போராடு இந்த உலகோடு இல்லை உன் மனதோடு உன் மனதிடம் நீ யார் என்று நிரூபித்தால் இந்த உலகம்…

பெண்ணே நீ எழு…


Image courtesy entrepreneur.com துணிவென்ற ஒன்று, துயர் நீக்கும் இன்று… பணிவென்ற ஒன்று, பகை போக்கும் நன்று… சிரம் தாழ்த்த நீயும், தரம் தாழ்வதில்லை… வாய் வீரம் கொண்டு, பலம் காண்பதும் இல்லை… துயில் கொள்ளு பெண்ணே… உன் துயர் நீங்கும் தன்னால்…. நிமிர்ந்து செல்… நிலை தடுமாறி நின்று போனால் நெஞ்சம் கலங்காது துணிந்து செல்…

எங்கள் கனவுகள்


இயற்றமிழ் இயங்கிடல் வேண்டும் – எங்கும் பயிற்று மொழியாய் பயின்றிடல் வேண்டும். கற்றது தமிழ் என்று இவ்வுலகில் – நாங்கள் மார் தூக்கி பெருமிதம் புரிய வேண்டும்.

இடைவெளி…


நாம் கொடுக்கும் இடைவெளி, நம் வாழ்வில் ஏராளமான மாற்றத்தை தோற்றுவிக்கலாம். இறந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் இடையே, மிகப் பெரிய பாலமாகவும் அமையலாம்..

கவிதை வேண்டும்


முகில் மறைத்த வானில் துயில் கொள்ள வேண்டும்.. அலை இல்லா கடலில் ஆர்ப்பறிக்க வேண்டும்.. துளை கொண்ட மூங்கிலில் காற்றாக வேண்டும்..

உன் வாழ்வை நீ வாழ்ந்திடு மனமே..


வாழ்க்கை புரட்டிய பல சுவடுகள் நம் எல்லோர் மனதிலும் இருக்கும். எது இருந்தாலும் சரி, இப்பொழுது இந்த நிமிடம் நாம் நமக்கு என்ன செய்தோம். சம்பாதிப்பது, படிப்பது எல்லாம் தாண்டி நம் மனதிற்கு எத்தனை நாள் நிம்மதி கொடுத்திருப்போம். 

வாழ்வே வரம்..


வாழ்வே வரம்.. வலியை வலியாக எண்ணாத உள்ளம், வாழ்வில் வழியை உருவாக்க நினைக்கின்ற வெள்ளம்.. கவலை,

கடந்து போ..!


கடந்து போ..! கஷ்டங்களை கடந்து போ.. கண்ணீரை உயிர் திராணியாய் கொண்டு போ.. சொல்ல முடியாத கவலை எனினும் மறந்து போ.. மண்ணில் புதைந்தும், நீரில் மூழ்கியும்,

பச்சை நிறப் பாவை


பச்சை நிற சேலை கட்டி படுத்திருக்கும் பாவை அவள். உச்சி மலை ஓரத்திலே குடியிருக்கும் குமரி அவள். தொட்டில் கட்டி சீராட்டி தாலாட்டும் தாய் நிலம். பூமியெங்கும் படர்ந்திருக்கும் பச்சை நிற வானம்.

வீரத் தமிழ் தேசம்


தமிழனின் வீரத்தை கிராமிய நடையில் உரைக்க முயன்றுள்ளேன் தோழமைகளே. உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அதோடு அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். சீறி வரும் தேகத்திலே ஏறி வருது வீரக்காள. பாய்ந்து வரும் வேகத்திலே அனல் பறக்கும் மனசுக்குள்ள. எட்டி நின்னு பார்க்கயிலே ஈரக்குளை இறந்து போகும். பறந்து வந்து அடக்கயிலே

வறண்ட நிலத்தில் ஒரு வாசகம்


தெருவெல்லாம் பிளந்திருக்க தீ பற்றியது என் தேகமெல்லாம். ஒரு சொட்டு நீர் தேடி ஓடியது கால்களெல்லாம். எரிகிறது தேகம், உறிகிறது உள்ளம். ஓடுகிறேன் ஒரு பொட்டு ஈரம் தேடி ஓடுகிறேன். எல்லை தென்படா தருணம் இது. எவ்விடம் செல்வேன் என்று தெரியாது, அடி எடுத்து வைக்கிறேன்,