கடந்து போ..!


inspireconfidence

கடந்து போ..!

கஷ்டங்களை கடந்து போ..

கண்ணீரை உயிர் திராணியாய்

கொண்டு போ..

சொல்ல முடியாத கவலை எனினும்

மறந்து போ..

மண்ணில் புதைந்தும்,

நீரில் மூழ்கியும்,

வாழும் பலவற்றைப்

பார்த்து விட்டுப் போ..

புன்னகை தான் வாழ்க்கை

என்று எமாறாமல்

கடந்து போ..

புவி தனிலே பூக்கள் மலர்வதை

கண்டு விட்டுப் போ..

பிறர் பறித்தாலும், வெறுத்தாலும்

சிரிப்பதைத் தான் பார்த்து விட்டுப் போ..

கண்டு கொள்ளாத கண்களைக் கண்டு

கவலைப் படாமல் போ..

முட்டி முளைத்த ஆலமரம் போல்,

வெட்டியும் வளர்வதைத் தான்

பார்த்துப் போ..

கஷ்டங்களை களைந்தால் தான்

இஷ்ட வைடூர்யம் கை கிட்டும்

என்பதை முரசறிவித்துப் போ..

உன் உள்ளம் வலி தாங்கிடுமாயின்

வாழ்க்கை வழி அறிவாய் எனக்

கூறி விட்டுப் போ..

உன்னை சாவு தழுவினும்

சத்தியத்தை சொல்லி விட்டுப் போ..

Advertisements

2 Comments Add yours

  1. சங்கடம் தான் வாழ்வென்றால் வண்ணத்து பூச்சியின் ஈரிறகும் அப்படியே இருக்கட்டும் என்று ரசிக்க மரத்து மறந்து போ என்பவன் நான்…..
    வஞ்சமில்லா நெஞ்சு வேண்டாத நாள் அனுபவமா ஆழ்மனவலியா …..

    சத்தியசுந்தரலிங்கரசவாசரே துணை…..

    Liked by 1 person

  2. ஆழ்மன வலி பெற்ற அனுபவம் தான் தோழமையே..

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s