மனதோடு மயக்கமோ


உயிரே… உன் அருகே வாழ்ந்தால் போதும்… உயிர் மயக்கம் தோன்றும் தோன்றும்… காதலே… கரை தாண்டிய தூரம் இருந்தும், கடல் தொலைவாய் ஏங்கும் ஏங்கும்… என் மனதில் பற்றிய மயக்கம், உன் மதியும் உணர்ந்திட ஏக்கம்…

நீளமான பாதை, நீளாத நாட்கள்


நீளமான பாதை நிலைத்திருக்கும் வாழ்வில்.. நிலையில்லா நாட்கள் நாம் வாழும் வாழ்க்கை.. கலையாத கனவுகள் கரைந்திருக்கும் நெஞ்சில்..  

முடிவில்லா பாதையில்


முடிவில்லா பாதையில் முகம் தெரியா பெண்ணொருத்தி தனிமையிலே தனக்கான வழி தேடி போனாள்!

கானகத்தின் கதறல்


கொழுத்தும் வெயிலில் குடையாய் நிழல் தந்த மரம் – இன்று உயிரை இழக்கும் நிலை இந்த உலகில் வர காரணம் ஏனோ?

யாருக்கும் வழி தெரியா காட்டுக்குள்


தனிமை.. யாருக்கும் வழி தெரியா காட்டுக்குள், ஒரு தனிமையான வாழ்க்கை.. வானத்து நிலவின் வாழ்க்கை தனிமை தான் என்றாலும் நான் நிலவல்லவே.. சூரியன் தொடா பூமி போல்,

சாலையோர சாகசங்கள்


மாலை நேரம் – ஒரு சாலை ஓரம் பார்த்தேன்.. பனித்துளி ஏந்திய பூக்களை அல்ல.. புழுதி சுமக்கும் புற்களை..

தனிமையின் எல்லைகள்


அடிகளைத் தேடுகிறேன், அடுத்த அடி எடுத்து வைக்க, வேதனை என்னும் கத்தியால் வெட்டப் பட்டதை மறந்து. சில்லரையாய் சிதறும் சிரிப்பு, உற்பத்தியில்லாத இதயத்தின் இடையில் இருந்து. கல்லோடும் மண்ணோடும்

பச்சை நிறப் பாவை


பச்சை நிற சேலை கட்டி படுத்திருக்கும் பாவை அவள். உச்சி மலை ஓரத்திலே குடியிருக்கும் குமரி அவள். தொட்டில் கட்டி சீராட்டி தாலாட்டும் தாய் நிலம். பூமியெங்கும் படர்ந்திருக்கும் பச்சை நிற வானம்.

வாழ்வின் வாசனைகள்


வாழ்க்கை.. வானவில்லின் வண்ணம்.. அதை நாம் முழுமையாய் பார்ப்பதற்குள் மறைந்து போய் விடும். தேடித் தேடி தீர்க்கப் பட்ட நாட்கள். ஓடி ஓடி உதிர்க்கப் பட்ட பூக்கள்.

மழை நேர மண் வாசம்


புகை சூழந்த நேரம், என் புவியெங்கும் ஈரம். மலை சூழ்ந்த மேகம், என் கனவெங்கும் தாகம். விண் மழை நீர் போல், என் கண்ணீரும் பொழிந்திடவே

இருவரிடையில்..


அந்தி மாலை அழைக்கின்ற வேளை, ஆகாயமெங்கும் காதல் அலை. அசைகின்ற காற்றில் அலைகின்ற மனதின் ஆசைக்கு இல்லையே எல்லை. என்ன இது மாற்றம்?

கொட்டும் மழையிலே


கொட்டும் மழையிலே ஒற்றைக் கோலம் பூண்டாய். வெட்டும் மின்னலிலே விண்மீனாய் பிரகாசித்தாய். வட்ட நிற கண்ணாடிப் பொட்டாய்,

வறண்ட நிலத்தில் ஒரு வாசகம்


தெருவெல்லாம் பிளந்திருக்க தீ பற்றியது என் தேகமெல்லாம். ஒரு சொட்டு நீர் தேடி ஓடியது கால்களெல்லாம். எரிகிறது தேகம், உறிகிறது உள்ளம். ஓடுகிறேன் ஒரு பொட்டு ஈரம் தேடி ஓடுகிறேன். எல்லை தென்படா தருணம் இது. எவ்விடம் செல்வேன் என்று தெரியாது, அடி எடுத்து வைக்கிறேன்,

எனக்காக நீ வேண்டாம் உனக்காக நான் வாழ்கிறேன்


கன நேரம் கண்ணில் பாய்ந்த அம்பும், மன பாரம் நெஞ்சில் ஏந்த வெம்பும். கண்ணீரில் ஏற்றி வைத்த தீபம், நெஞ்சத்தை தீண்டி விட ஆறும். சுவரோரம் படிந்த பாசி நானோ. மழையாலே மலர்கின்ற மலரும் தானோ. மழலைகள் வந்தாடும் மடியில்,

மழைத் துளிகள்..!


மேக மகள் கண்ணீரோ இந்த மழைத் துளிகள்..! அவளின் கண் கொண்ட மை கலந்த காரணமோ, அவள் பெயர் கரு மேகம்..! தூரல் உருவில் தீண்டுகிறாய்..! இதயத்தை இதழால் வருடுகிறாய்..! வானத்தில் தொடங்கிய உன் அழுகை,

ஒத்தயிலே நிற்கிறாயே


ஒத்தயிலே நிற்கிறாயே, இதழெல்லாம் நனைஞ்சிருக்கு.. ஒத்த வார்த்த வேணுமுன்னு, மொத்த உசிர் காத்திருக்கு.. தேடி வந்த தேவதை தான், கோடி வரம் போதல தான்..