அவள் தான் நதி-8


Horror-scary-stories-in-tamil
Picture taken from pxfuel

அந்த அறை இரண்டு மாடிகளுக்கு மேல் இருந்தது.. மெல்ல நடந்து மேலே அந்த அறைக்கு அழைத்துச் சென்றான் அவன்..

பதட்டமும் பயமும் நிறைந்தவளாய் அவனுடன் அந்த அறைக்கு சென்றாள் நதி.. அந்த அறையின் கதவை திறந்தவுடன் கண்களுக்கு எதுவுமே தென்படாத அளவுக்கு புகை மூட்டமாக இருந்தது..

என்ன என்று யோசிப்பதற்கு முன் அவளை ஏதோ ஒன்று வேகமாக வந்து இறுக கட்டிப் பிடித்துக் கொண்டது.

“ஆஆஆஆஆஆஆஆஆஆ” யாரது……..

என்று அலறிக்கொண்டே பிடித்திருந்த உருவத்தை வேகமாக உதறிவிட்டு அந்தக் கோட்டையின் ஏதோ ஒரு மூலைக்கு தலைதெறிக்க ஓடினாள் நதி.

அவன் அவளை தடுக்க முயன்றும் முடியாமல் பின் தொடர்ந்து ஓடினான்..

தப்பித்து ஓடி விடுவோம் என்று நினைத்து ஓடிய நதிக்கு பெரிய ஏமாற்றம்.. ஏனென்றால் கோட்டை முழுவதும் அந்த மாளிகையில் வெளியில் செல்வதற்கு வாயிலே இல்லை..

ஓடி ஓடி களைத்துப்போன நதி சக்தி இழந்தவளாய் அங்கேயே மண்டியிட்டு கதற ஆரம்பித்தாள்..

“என்ன விட்டுருங்க... நான் எங்கேயோ போயிடுறேன்.. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு நான் செத்தே போயிருக்கலாம்..”

அழுகையும் ஆத்திரமும் நிறைந்தவளாய் எழுந்து அவன் அணிந்திருந்த உடையையும், அணிகலன்களையும் இழுத்து கிழிக்க தொடங்கினாள்..

“உன்னால் உன்னால் தானே நான் இத்தனை கஷ்டப் படுறேன். இப்பவாவது சொல்லு நீ யாரு? என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தே? என்ன கொல்ல வந்த பேய்ல நீயும் ஒன்னா? இந்த கோட்டைக்கு உள்ளே வந்ததும் உடையும் நகையும் உன்னோட தோற்றமும் எப்படி மாறிச்சு? நீ என்னை காப்பாத்த கூட்டிட்டு வந்து இருந்தா அந்த அறைக்கு என்னை எதுக்கு கூட்டிட்டு போனே?. என்னை இறுக பிடித்து விட்ட அந்த உருவம் என்ன? இப்பவாது என்கிட்ட சொல்லு இல்லன்னா நான் இங்கேயே ஏதாவது பண்ணிக்கிறேன். என்னால உயிர் வாழ முடியல..”

என்று ஆத்திரம் தீர கத்தி தீர்த்தாள் நதி..

“சொல்றேன்”

என்று ஆரம்பித்தான் அவன்..

“இத்தனை கேள்விகள் நீ கேட்டாலும் இப்போதைக்கு என்கிட்ட இருக்கிறது உன்னோட ஒரு கேள்விக்கான பதில் மட்டும் தான்”

“என்ன அது?”

என்று அவன்மீது மிகுந்த கோபத்தோடு கேட்டாள்..

“அந்த அறையில் உன்னை இறுக கட்டிப் பிடித்துக் கொண்டது வேறுயாருமல்ல உன் அம்மா”..

பேரதிர்ச்சியில் உறைந்து போனாள் நதி……

தொடரும்……….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s