
மனம் இறங்கி வருவாயா.. உன் மடி சாய காத்திருக்கிறேன்..
உன் விழியோர பார்வை, அதை வழி எங்கும் பார்த்திருக்கிறேன்..
ஏனென்று தெரியவில்லை.. என் காதலை உன்னிடம் சொல்ல நினைக்கும் போதெல்லாம், என் இமை முழுதும் நனைந்து போகிறது..
என் கருவிழியில் உன்னை களவாடி வைத்திருக்கிறேன் உனக்கே தெரியாமல்..
உருகும் மெழுகாய் உதிர்ந்து கொண்டே இருக்கிறேன் உனக்கு அது புரியாமல்..
எதுவுமே புரியாதவளாய் உள்ளத்தில் பூத்துக் கொண்டே இருக்கிறேன் தினம் உன்னில் உறைந்தவளாய்..
உன் மனதில் உள்ள என்னை ஒருமுறை என்னிடம் காட்டு, என் உயிரை உன்னோடு தருவேன்.. மண்ணில் புதைத்தாலும் உன்னோடு வருவேன்..!
தமிழ் இளவரசி…