அடி எடுத்து வைக்கிறேன்


drought

தெருவெல்லாம் பிளந்திருக்க தீ பற்றியது என் தேகமெல்லாம்.

ஒரு சொட்டு நீர் தேடி ஓடியது கால்களெல்லாம்.

எரிகிறது தேகம், உறிகிறது உள்ளம்.

ஓடுகிறேன் ஒரு பொட்டு ஈரம் தேடி ஓடுகிறேன்.

எல்லை தென்படா தருணம் இது.

எவ்விடம் செல்வேன் என்று தெரியாது,

அடி எடுத்து வைக்கிறேன்,

ஆறு வயது ஆணிக் கால்களுடன்.

வாசகம் படிக்க நேரமில்லை, வாழ்வில் ஜெயிக்க தோன்றவில்லை.

வாய் வறண்டிடும் போது, மனதில் துளி நீர் தவிர ஏதும் தோன்றவில்லை.

அறுசுவை உணவு வேண்டாம்.

ஆடம்பர வாழ்க்கை வேண்டாம்.

அழகிய மாளிகை வேண்டாம்.

அரை வயிறு சோறு கூட வேண்டாம்.

தவித்த வாய்க்கு தண்ணீர் போதும்.

தடம் மறந்த கால்களுக்கு ஈரத் தடயம் தந்தால் போதும்.

ஒவ்வொரு சொட்டாய் உதிர்த்தால் கூட போதும்.

உயிரை உடலில் தக்க வைப்பதே போதும்.

மறுகியது நெஞ்சம். ஆறு வயது வலிகளை யாரிடம் போய் உரைப்பேன்.

தேறிய கால்களும் உறுதியான உள்ளமும் பெற

போதவில்லை போலும் என் வயது.

உறிந்த கால்களோடு ஓடும் நான், உங்கள் பிள்ளையாக இருப்பின்

உங்கள் உள்ளம் நிம்மதியாய் உலவிடுமா இவ்வுலகில்..?

கவலை வேண்டாம் நான் உங்கள் பிள்ளை இல்லை-ஆனால்

உங்கள் சந்ததி தான்-ஐம்பது ஆண்டுகட்கு பின்பு.

இன்று உங்களின் அலட்சியம்,

நாளைய எங்களின் மரணம்…!

7 Comments Add yours

  1. tamilelavarasi சொல்கிறார்:

   Thank you my friend.

   Like

 1. Subbashini Meenakshi Sundaram சொல்கிறார்:

  Beautiful, beautiful , but I surely know we should not stop only by words. Small step taken by each one of us can bring big change. I believe in it and following it as far as I can

  Liked by 1 person

  1. tamilelavarasi சொல்கிறார்:

   Yes my friend.. Sure..

   Liked by 1 person

 2. Vengatesh Venkie சொல்கிறார்:

  🤗🤗🤗Nam Aludhal Dhan Kannir Thulikal Varum Anal Nalla Nanban Arugil Irundhal Kannir Thulikalum Nammai Vitu Prindhu Sella Yeankum Un Natpinal🤗🤗🤗

  Liked by 1 person

  1. tamilelavarasi சொல்கிறார்:

   உண்மை நண்பா..

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s