அவள் தான் நதி – 2


அவள் சத்தம் வெளி வரும் முன்பே நதி அங்கிருந்து தூக்கி எறியப்பட்டாள். அந்த கருப்பு உருவம் அவள் காலை பிடித்து இழுத்துக்கொண்டே ஒரு காட்டிற்குள் சென்று மறைந்தது. அதிர்ச்சியில் மயங்கிய நதி எழுந்து பார்த்தால் அது ஒரு சூனிய காரனின் சுடுகாடு.

அதிர்ந்து போனாள் நதி. அந்த இடம் ஒரு அடர்ந்த காடு. ஓநாய்கள் ஓலமிட்டு கொண்டிருந்தன. ஆந்தைகளின் அலறல் சத்தம் அவள் காதுகளை அடைக்க செய்தன. அரை நிலவொளியில் அந்தக் காடு மங்கலாக தெரிந்தது. ஆயிரம் பிணங்களை புதைத்தது போல் தெரிந்தது அந்த சுடுகாடு.

படாரென எழுந்தாள். ஆனால் என்ன செய்வது என்று அவளுக்கு தெரியாமல் பயந்து படபடத்து நின்றாள். நாக்கு வரண்டு போனது. அவளால் மூச்சு விட முடியவில்லை.

தீர்மானித்தாள்..

“ஓடு… ஓடு… இங்க நிக்காத… ஓடிடு..”

என்று யாரோ ஒரு குரல் அவள் காதில் கேட்டதும் நிற்காமல் ஓட தயாரானாள்..

ஓடினாள்.. ஓடிக்கொண்டே இருந்தாள். நிற்காமல் ஓடினாள் எங்கு போகிறோம் என்று கூட தெரியாமல் ஓடினாள்..

இதற்கு மேல் ஓட முடியாது என்று மூச்சுத்திணறி ஒரு இடத்தில் சாய்ந்து நின்றாள்..

அப்போது..

அம்மா நதி.. என்ன காப்பாற்றுமா.. என்னை யாரோ இங்க அடைச்சு வெச்சிருக்காங்க மா.. என்னால மூச்சு கூட விட முடியல மா.. என் கிட்ட வா மா..”

என்று குரல் அவள் அருகில் இருந்து கேட்டது.. அந்தக் குரல் வந்த திசை நோக்கி அவள் திரும்பி பார்த்தாள்.. யாரோ ஒருவரின் பின்பக்கம் தெரிந்தது.. அது யாராக இருக்கும்.. என்று யோசித்துக்கொண்டே அதன் அருகில் சென்றாள்..

“நீங்க யாரு”

என்று நடுங்கிய குரலில் கேட்டாள். அவள் அருகில் செல்ல செல்ல அந்த உருவம் தூரமாக போய்க்கொண்டே இருந்தது.. அந்த உருவத்தை அவளால் தொடவே முடியவில்லை..

ஒரு தருணத்தில் அந்த உருவம் மறைந்து போனது…

ஒன்றுமே புரியாதவளாய் பதைபதைத்து நின்றாள். அந்த கணம் மயான அமைதியாக இருந்தது அந்தக் காடு.. சுற்று முற்றும் பார்த்தாள்.. ஒன்றுமே தெரியவில்லை..

திடீரென்று அவள் கால்களால் நகர முடியவில்லை.. அவள் கைகளால் அசைய முடியவில்லை.. நாவினால் பேசமுடியவில்லை.. என்னவென்று தெரியாமல் பதறிப்போனாள் நதி..

யாரோ அவள் கால்களின் அடியில் இருந்து மண்ணுக்குள் இழுப்பது போல் தோன்றியது.. படாரென்று நிலத்தின் அடியில் இழுத்துக் கொண்டே போனது.. முடிவில்லாமல் போய்க் கொண்டே இருந்தது..

அந்த நிமிடம் ஒரு உருவம் அவள் கையை பிடித்துக் கொண்டது..

“யாரது யாரது…”

தொடரும்..

2 Comments Add yours

  1. ramanshitha7 சொல்கிறார்:

    அருமை அக்கா..படிக்க படிக்க அடுத்து என்ன ஆகும் எனும் ஆர்வத்தை தூண்டுகிறது..

    Liked by 2 people

    1. tamilelavarasi சொல்கிறார்:

      மிக்க நன்றி சகோதரி..

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s