இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்தஇயற்கை-10


2342380918_d4c8a29e15_b

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கையின் இறுதி பகுதி இன்று.. இந்தப் பகுதியோடு இந்த தொடர் கவிதை முடிவடைகிறது.. வாழ்வில் எல்லோருக்கும் துன்பம் வரும். எல்லோரும் அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் அந்த துன்பமே தோற்கும் அளவிற்கு வாழ்வது தான் நம் வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் அடையாளம்.. அந்த அடையாளத்தைப் பெற முயன்றவர்கள் சிலர், முயற்சி செய்யாமலே மடிந்து போனவர்கள் பலர்.. முயற்சி என்பது செயலில் மட்டும் இல்லை, நம் மனதின் எண்ணங்களிலும் இருக்கிறது. இனி இன்றைய இறுதிப் பகுதி..

43426060cc4285a42d662bea107ddb55

ஒரு நாள் மாற்றம்..
அப்பாவின் கடன் தொல்லை தீர
உறவிடம் கடன் வாங்க நேர்ந்தது..

கடன் அடைக்கத் தான்
கடன் வாங்க
சென்றோம் நகரத்தில் உள்ள
உறவினர் வீட்டிற்கு..

விதி என் வாழ்வை மாற்ற
திட்டமிட்ட இடம் இது தான்
என்று அறியாதிருந்தேன் நான்.

எனக்கு அங்கு தான் என்
வாழ்வின் பாதை மாறியது..

பல போராட்டம் தாண்டி கிடைத்தது
எனக்கு என் கல்வி..

உயிரின் மேல் வந்து
அட்டாலி போட்டு
அமர்ந்து கொண்டது என் கல்வி..
காரணம் என் காதல்..
இயற்கை என்ற இறைவன்..

யாருமே இல்லை என்று
எண்ணிய வேளை..
துணை இன்றி தனியே
நின்ற நாளை,
முடியுமா நெஞ்சே மறந்திட..
வேண்டும் வேண்டும் என்றாலும்,
முடியாது முடியாது என்ற
குரல் மட்டுமே கேட்ட என்
காதுகள் இன்று,
சரி நடக்கட்டும் என்று கூறும் ஓசை கேட்டு
நெகிழ்ந்து தான் போனது..

ஆயிரம் கோடி ரூபாய்
வருமானம் பெற்று
வருந்தாமல் வாழ்ந்தாலும்
கிடைக்காத இன்பம் கிடைத்தது இன்று..
அந்த ஒற்றைச் சொல்லில்..

சாதிக்கத் துடிக்கும் எனக்கு
சரித்திரம் படைக்க இறைவன்
கொடுத்த அற்புத கிரீடம்,
என் கல்வி..

acc620923524d065062f22b87aa0bb04

துளையில்லா மூங்கில்
துயில் கொண்டு தான் வாழும்..
துளையின் வலி தாங்கும் மூங்கில்
இசையால் உயிரின் ஆழம் வரை வீழும்..
இங்கு வாழ்தல் மேன்மையுமன்று..
வீழ்தல் சிறுமையுமன்று..

-தமிழ்இளவரசி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s